தகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை!
Recommended Video
திருப்பூர்: உடுமலையில் இளம் பெண் ஒருவர் பட்டப்பகலில் வீடு புகுந்து வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறான உறவுகளால் கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்காதலன் உதவியுடன் கணவன் கொல்லப்படுவதும், கள்ளக்காதலிக்காக மனைவி கொல்லப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் தன்னுடனான கள்ள உறவை திடீரென துண்டித்ததால் ஆத்திரமடைந்த உறவினர் இளம்பெண்ணை வீடுபுகுந்து வெட்டி கொலை செய்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில்தான் இந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.

கூலி வேலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சார்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி சுமதி, இவருக்கு வயது 24. இருவரும் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தனர்.

தவறான பழக்கம்
கூலி வேலைக்கு செல்லும் போது சுமதியின் கணவர் திருமலை சாமிக்கு தம்பி முறை உறவினரான கணேசன் என்பவருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை சுமதியின் குடும்பத்தினர் கண்டித்தனர்.

வீட்டில் தனியாக இருந்த சுமதி
இதனால் சுமதி கணேசனுடன் பேசுவதை நிறுத்தினார். தன்னுடனான தொடர்பை திடீரென துண்டித்ததால் ஆத்திரத்தில் இருந்தார் கணேசன். இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த சுமதியை சந்தித்து தன்னிடம் பேசாதது குறித்து கேட்டுள்ளார் கணேசன்.

துடிதுடித்து பலி
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபமடைந்த கணேசன் சுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சுமதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

போலீஸ் வலைவீச்சு
சுமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான கணேசனை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications