சத்தியபாமாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 2 சுற்றுகளில் பானுமதி முன்னிலை வகிக்க இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் முதல் முன்னிலையில் இருந்த தவெக வேட்பாளர் சத்தியபாமா திடீரென பின்னடைவை சந்தித்த போது அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை பெற கைகொடுத்த குண்டடம் ஒன்றியம் குறித்து தெரிந்து கொள்வோம்.

தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

By Election 2026 By Election results 2026 Madhuranthagam by election Dharapuram by election

இந்த தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1,79,314 பேர் வாக்களித்தனர். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66841 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளை பெற்றார். சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 5268 வாக்குகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1157 வாக்குகளையும் பெற்றது.

இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என கூறி வந்த நிலையில் தவெக வெற்றி பெற்றது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வெற்றியை தவெகவினர் கொண்டாடினர். தாராபுரத்தில் தபால் வாக்குகளில் திமுக, அதிமுக முதல் இரு இடங்களை பெற்றுள்ளன. மொத்தம் பதிவான 1406 தபால் வாக்குகளில் திமுகவுக்கு 613 வாக்குகளும் அதிமுகவுக்கு 406 வாக்குகளும் தவெகவுக்கு 255 வாக்குகளும் நாதகவுக்கு 19 வாக்குகளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 வாக்குகளும் கிடைத்தன.

தாராபுரத்தில் தபால் வாக்குளில் தவெக முன்னிலை வகித்தது. இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் எண்ணிய போது முதல் 2 சுற்றுகளில் தவெக வேட்பாளர் முன்னிலை வகித்தார். அதன் பிறகு 3,4,5 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார்.

இதுகுறித்து விசாரித்த போதுதான் அந்த சுற்றுகளில் எண்ணப்பட்டது குண்டடம் ஒன்றியத்தின் வாக்குகளாம். இது அதிமுக வலுவான கிராமப்புறங்களில் ஒன்று என அறியப்படுகிறது. நகரங்களை விட குண்டடம் போன்ற ஊரக பகுதிகளில் அதிமுகவின் பாரம்பரிய வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுக வேட்பாளர் பானுமதி கவுன்சிலராகவும் பணியாற்றியவர். குண்டடம் ஒன்றியத்தில் விவசாயிகல், கிராமப் பெண்களிடம் அவருக்கு நல்ல அறிமுகமும் சமூகத் தொடர்பும் இருந்ததால் அந்த சுற்றுகள் கை கொடுத்தது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், விவசாய நலத்திட்டங்கள் குறித்து சாதகமான அம்சங்கள் குண்டடம் வாக்குப் பதிவில் எதிரொலித்தது. இதன் பிறகு நகர்ப்புறங்களில் அதிமுகவை திமுக வேட்பாளர் சுகன்யா முந்தினார். அவர் மேலும் முந்தி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது தவெக வேட்பாளரே தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றி பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+