அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி...234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - ஈபிஎஸ் நம்பிக்கை
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : இந்தியாவை வல்லரசாக்கும் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 13 தொகுதி வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைத்து பேசினார் பிரதமர் மோடி.

பொதுக்கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் மோடி. அவரது உழைப்பால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது எனவும் புகழாரம் சூட்டினார்.
இந்தியாவை வல்லரசாக்கும் கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி. நாட்டின் உயர்வுக்காக ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல் பாடுபட்டு வருகிறவர் மோடி. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு எனவும் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி, நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய கூட்டணி என்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த உள்கட்டமைப்பு வசதி இருப்பதால் தான் தடையில்லா மின்சாரம் தமிழகத்தில் கிடைக்கிறது. சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ மத்திய பாஜக அரசு காரணம் எனவும் கூறினார்.
நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசின் ஆலோசனையுடன் கட்டுப்படுத்தினோம். கொரோனா காலத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ1,000 கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications