திருப்பூரில் தோழி வீட்டில் தனியாக இருக்கலாம்.. உல்லாசத்திற்கு அழைத்த பெண்.. மறக்க முடியாத சம்பவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவருக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் உள்ளது, நேற்று முன்தினம் மாலை அந்தப் பெண்ணிடம் செல்போனில் குமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் "தான் பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தில் தோழியுடன் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறினாராம்.. அதை நம்பி போனவருக்கு மறக்கவே முடியாத சம்பவம் நடந்துள்ளது.
உல்லாசமாக இருக்கலாம் என்று பெண்களை பேச வைத்து ஏமாற்றுவது அவ்வப்போது நடந்து வருகிறது. சிலர் சமூக வலைதளங்களில் ஆண்களிடம் பழகுவார்கள்.. இனிக்க இனிக்க பேசுவார்கள்.. அவர்களை நம்ப ஆரம்பிக்கும் ஆண்கள், ஜாலியாக இருக்க ஆசைப்படுகிறார்கள். அதற்காக தனியாக வரச்சொல்லுகிறார்கள்.. உண்மையில் அவர்களின் பேச்சை நம்பி போனால், அங்கு அந்த பெண்ணுடன் மேலும் சிலர் இருப்பார்கள். அவர்கள் அத்துமீறுவதை வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள்.. பின்னர் அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள். சிலர் மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.. திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்த 49 வயதாகும் குமார் என்பவர் ஒரு பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்தப் பெண்ணிடம் செல் போனில் குமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் "தான் பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தில் தோழியுடன் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறினாராம்.
இதனால் குமார் ஆசை ஆசையாய் அந்த பெண் குறிப்பிட்ட சின்னிய கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு போனாராம். அப்போது அங்கு முகமூடி அணிந்து இருந்த மர்ம ஆசாமிகள் குமாரை கத்தியைக் காட்டி அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம் மற்றும் ரூ.3,500 பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லடம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த தினகரன் (45), அம்மா பாளையத்தைச் சேர்ந்த ராஜதுரை (24), ஜே.கே.ஜே. காலனியை சேர்ந்த பரத் (22), மேற்கு பல்லடத்தை சேர்ந்த துரைராஜ் (29), அதே பகுதியைச் குமார் (29), இவர்களுக்கு உறுதுணையாக இருந்த திருச்சியை சேர்ந்த தேவி (40) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கநகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications