அன்பில் மகேஷை மிரட்டினாங்களா? திமுகவினரை பார்த்தாலே ஊழல் ஞாபகம் தான் வரும்: தவெக அமைச்சர் அருண்ராஜ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் தவெக அரசு செய்து தரும் என்று அமைச்சர் அருண்ராஜ் உறுதி தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, திமுகவினரை பார்த்தாலே ஊழல் தான் ஞாபகம் வரும் என்றும், ஊழலில் இல்லாத ஆட்சியை நடத்தி வருவதே தங்களது தவெகவின் 4 மாத சாதனை என்றும் அமைச்சர் அருண்ராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் பேசும்போது,"ஒவ்வொரு திமுக முன்னாள் அமைச்சர்களை பிரசாரத்தில் மக்கள் பார்க்கும் போது அவர்கள் செய்த ஊழல் தான் மக்கள் கண் முன் வரும்... திமுக முன்னாள் அமைச்சர்களின் பிரச்சார வருகை தவெகவின் வெற்றியை இன்னும் எளிதாகும்.

Anbil Mahesh

அன்பில் மகேஷை ரெயிடின்போது, போலீஸ் தரப்பில் வற்புறுத்துகிறதாகவும், மிரட்டியதாகவும் என்னென்னவோ கூறப்படுகிறது.. நான் இதற்கு முன்பு, முன்னாள் புலனாய்வு துறையில் இருந்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் சொல்கிறேன், எப்போதுமே ரெயிடு நடத்தும்போது அதிகாரிகள் இப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள்.. ஏனெனில் எதுவுமே ஆதாரப்பூர்வமாக தேவை.. குற்றங்கள் நிரூபிக்க ஆதாரம் மட்டுமே தேவை.. அப்படியிருந்தால்தான் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்..

அன்பில் மகேஷ் மீடியாவுக்காக இப்படி சொல்லலாம்.. அல்லது தன்னுடைய தவறை மறைக்க இப்படி சொல்லலாம்.. இதுபோல் சொல்லி எப்போதுமே மக்களை ஏமாற்றிவிடலாம் என்று திமுக நினைக்கிறது. அது இனிமேல் மக்களிடம் எதுவும் செல்லுபடியாகாது,

4 மாத காலம் முதன்மையான சாதனையாக நாங்கள் நினைப்பது, வெளிப்படையான, நேர்மையான, ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தந்திருக்கிறோம் என்பதுதான்.. ஏனெனில் லஞ்ச ஊழலை இங்கு ஒரு அங்கமாகவே மாற்றியிருந்தார்கள்.. ஆனால், இப்படிப்பட்ட கலாச்சாரத்தையே எங்கள் தலைவர் இன்று ஒழித்துள்ளார்.. இது தவெகவின் உண்மையான சாதனை, இதுதான் உண்மையான மாற்றம்.. மக்கள் தந்த வாய்ப்பை எங்கள் தலைவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த தாராபுரம் தொகுதியில் நிறைய தேவைகள் உள்ளது.. ஆனால், இதுவரை ஆண்டவர்கள் எந்த வசதியையும் செய்து தரவில்லை.. பாசன வசதிக்கான தேவையும் உள்ளது.. நீண்ட கால சிந்தனை திட்டத்துடன், தாராபுரத்துக்கு தேவையானதை நாங்கள் செய்ய போகிறோம்..

அதேபோல இன்றைய காலகட்டத்தில், உறுப்பு மாற்று சிகிச்சை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.. மருத்துவ சேவையாகவும் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள நிறைய பேர் பதிவு செய்துவிட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள்.

நமது அரசில் அனைத்து துறைகளை போலவும், மருத்துவ துறையிலும் உறுப்பு மாற்று இந்த பிரிவு வந்து முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். இந்த வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படும். உறுப்பு மாற்றம் செய்வதை வியாபாரமாக செய்வதை பார்த்து கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது" என்றெல்லாம் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+