திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி
திருப்பூர்: நரைத்த முடி.. வெள்ளை சட்டை.. தள்ளாடிய நடை.. ஆனாலும் கூட நம் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள்? என்பதை அறியும் ஆர்வத்தில் வீட்டுக்கு வெளியே வந்த முதியவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது அங்கு பிரசாரத்துக்கு வந்த திமுகவின் 28 வயது நிரம்பிய வேட்பாளரான டாக்டர் கோகிலாமணி முதியவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் நரைத்த முடியுடன் அழுக்கான வெள்ளை சட்டையுடன் தரையில் அமர்ந்திருநக்கிறார் ஒரு முதியவர். அவர் அருகே தள்ளாடும் வயதில் மூதாட்டி ஒருவர் பதற்றத்துடன் காணப்படுகிறார்.

அப்போது முதியவரின் தலையை தூக்கி ''பதற்றப்பட வேண்டாம்.. ஒன்னும் இல்லை.. சரியா..'' என்று ஒரு ஆறுதலோடு கூடிய அன்பான வார்த்தைகளை சொல்லி தேற்றி அந்த முதியவரின் உயிரை காக்க முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கிறார் ஒரு இளம்பெண்.
26 வயது இளம் வேட்பாளர்
கருப்பு சிவப்பு நிற சேலை அணிந்து கழுத்தில் திமுக துண்டுடன் இருக்கும் அந்த பெண் தான் அவிநாசி சட்டசபை தொகுதியின் திமுக வேட்பாளர் கோகிலாமணி. வயது 28. இவர் தான் திமுகவின் இளம் வேட்பாளராக உள்ளார். அடிப்படையில் டாக்டர். இவர் நேற்று செய்த இந்த சம்பவம் அந்த முதியவரின் உயிரை காப்பாற்றி உள்ளது. அங்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அவிநாசியில் தீவிர பிரசாரம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் கோகிலாமணி போட்டியிடுகிறார். இவர் நேற்று கொட்டக்காடு, தேக்கலூர் பேருந்து நிறுத்தம், எரிக்கப்பாளையம், காமநாயக்கன்பாளையம், வெள்ளண்டிப்பாளையம், சமத்துவபுரம், ராஜீவ்காந்தி நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.
முதியவரும் - மூதாட்டியும்..
தேக்கலூர் சமத்துவபுரத்தில் அவர் பிரசாரம் செய்ய சென்றார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அவரை பார்க்க வெளியே வந்தனர். அப்படியாக ஒரு முதியவரும், மூதாட்டியும் வெளியே வந்தனர். தள்ளாடும் வயதிலும் கூட நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களின் கால்கள் வேட்பாளரை நோக்கி விரைந்தன.
மயங்கி விழுந்த முதியவர்
அப்போது திடீரென்று அந்த முதியவர் மயங்கினார். உடனடியாக அவர் தரையில் படுத்தார். இதனை கவனித்த திமுக வேட்பாளர் கோகிலாமணி தனது பிரசாரத்தை கைவிட்டு உடனடியாக அந்த முதியவரை நோக்கி ஓடினார். தரையில் படுத்து கிடந்த முதியவரின் தலையை தூக்கி வைத்து, ''பதற்றப்பட வேண்டாம்.. ஒன்னும் இல்லை.. சரியா..'' எனக்கூறி அவரை பரிசோதித்தார். அப்போது அவர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கியது தெரியவந்தது.
முதலுதவி சிகிச்சை
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆசுவாசப்படுத்தினார். பிறகு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முதியவர் நலமாக உள்ளார். இதற்கிடையே தான் முதியவருக்கு திமுக வேட்பாளர் கோகிலாமணி முதலுதவி சிகிச்சை அளித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் கோகிலாமணியை பாராட்டி வருகின்றனர்.
அவிநாசியில் வெல்வது யார்?
இந்த அவினாசி தொகுதியில் திமுக சார்பில் கோகிலா மணி போட்டியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கமலி என்பவரும் களமிறங்கி உள்ளனர். தற்போது அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நான்கு முனை போட்டியில் யார் வெல்வார்கள்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications