திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாப்பிட்டு 4 நாளாச்சு! திருவோடு வாங்கி தாங்க! பிச்சை எடுக்கிறேன்! ரோட்டில் அழுத பாஸ்கரானந்தா

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருவோடு வாங்கிக் கொடுங்கள், பிச்சை எடுக்கிறேன், ஆன்மீகவாதியை அழ வைக்காதீர்கள் என சாமியார் பாஸ்கரானந்தா போலீஸாரிடம் அழுது கொண்டே பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றவழக்கில் சிக்கிய நித்யானந்தா கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக கைலாசா எனும் தனித்தீவை விலைக்கு வாங்கி அங்கு வசித்து வருகிறார். இவர் பெருமாள் அவதாரம் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதற்கு இந்து அமைப்புகளும் பெருமாள் பக்தர்களும் கடுமையாக கொந்தளித்தனர்.

தினந்தோறும் சத்சங்கம் செய்து வந்த நித்யானந்தா, திடீரென சில மாதங்களாக நேரடியாக வீடியோவில் தோன்றவில்லை. இந்த நிலையில் நித்யானந்தாவை போல தோற்றமளிக்கும் பாஸ்கரானந்தா கோவையில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். அவர் தற்போது வைரலாகி வருகிறார்.

நித்யானந்தா ரொம்ப நல்லவருங்க! கண்டிப்பா ஒருநாள் வருவார் பாருங்க! விஸ்வாசம் காட்டும் திருச்சி சூர்யா! நித்யானந்தா ரொம்ப நல்லவருங்க! கண்டிப்பா ஒருநாள் வருவார் பாருங்க! விஸ்வாசம் காட்டும் திருச்சி சூர்யா!

பல்லடம்

பல்லடம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் கோவையை சேர்ந்தவர் பாஸ்கரன் அண்ணா. இவர் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆசிரமத்தை அமைத்திருந்தார். இந்த நிலையில் செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக தெரிகிறது.

பாஸ்கரானந்தா

பாஸ்கரானந்தா

இதனால் இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது. இது தொடர்பாக பாஸ்கரானந்தா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் நீதிமன்ற உத்தரவுகள் இன்றி ஆசிரமத்தை இடித்தது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் விசாரணை நடைபெற்றது.

3ஆவது நாள் விசாரணை

3ஆவது நாள் விசாரணை

3ஆவது நாளாக விசாரணைக்கு வந்த பாஸ்கரானந்தா, இரு பேருந்துகளில் பக்தர்களை அழைத்து கொண்டு பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். இதனால் பல்லடம் காவல் நிலையம் முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து பாஸ்கரானந்தாவை போலீஸார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

 அனுமதியின்றி கூட்டம்

அனுமதியின்றி கூட்டம்

அப்போது அவரிடம் எதற்காக இப்படி அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியுள்ளீர்கள் என போலீஸார் கேட்டனர். அதற்கு பாஸ்கரானந்தா, அவர்கள் கூட்டம் அல்ல, எனது பக்தர்கள் என பதிலளித்தார். அவர் மேலும் கூறுகையில் எனது ஆசிரமம் இடிக்கப்பட்டதால் வாழ்வாதாரமே பறிபோய்விட்டது.

நீதிமன்ற ஆணைகள்

நீதிமன்ற ஆணைகள்

நீதிமன்ற ஆணைகள் எதுவும் இல்லாமல் தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மீண்டும் மீண்டும் போலீஸார் கூட்டம் கூடியது குறித்து கேட்டதால் சாமியார் பாஸ்கரானந்தா உடைந்து போய் அழுது கொண்டே பேசினார். அவர் கூறுகையில், திருவோடு வாங்கித் தாருங்கள். நான் பிச்சை எடுத்துக் கொள்கிறேன்.

பேருந்தில் ஏற்றி அனுப்பிய பாஸ்கரானந்தா!

பேருந்தில் ஏற்றி அனுப்பிய பாஸ்கரானந்தா!

ஆன்மீகவாதியை இப்படி ரோட்டில் நிற்க வைத்து அழ வைக்காதீர்கள் என கலங்கினார். அவர் அழுததை பார்த்த பக்தர்கள் கலக்கமடைந்து கண்ணீர் விட்டனர். இதையடுத்து பக்தர்களை பேருந்தில் ஏற்றி வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பாஸ்கரானந்தா.

English summary
Nithyananda's Xerox Baskaranandha cries while talking to Police in his Ashram demolish issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X