பேனர் அக்கப்போர்; எல்லாமே அவசரம்; மே 2-க்கு முன்பே அதிமுக வேட்பாளரை MLA-வாக்கிய காங்கேயம் ர.ர.க்கள்!
திருப்பூர்: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அதிமுக வேட்பாளர் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பேனர் வைத்துள்ள கூத்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரங்கேறியுள்ளது.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ராமலிங்கம் முருகவேல் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் களம் கண்டார்.

இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையான போட்டியை கொடுத்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து தற்போது தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், காங்கேயம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அதிமுகவினரின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
பழையக்கோட்டை ஊராட்சி அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறியிருந்தால் கூட அதில் ஓரளவு லாஜிக் இருந்திருக்கும். ஆனால், 13, 483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என குறிப்பிடப்பட்டது தான் இப்போது பூதாகரமாகியுள்ளது.
ஏற்கனவே வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மர்ம நபர்கள் நடமாடுவதாகவும், கணினி நிபுணர்கள் வந்து செல்வதாகவும் திமுகவினர் தமிழகமெங்கும் புகார் கூறி வரும் வேளையில், காங்கேயம் அதிமுக வேட்பாளர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் திமுகவினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதில் இன்னொரு முக்கிய விவகாரம் என்னவென்றால் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று கூறி அதில் ஒரு அலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த பேனர் விவகாரத்தை திமுக தரப்பு தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications