அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவில் அண்ணாமலை அப்செட்டாக உள்ள நிலையில், திருப்பூரில் அவரின் ஆதரவாளர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி தடாலடியாக எடுத்துள்ள முடிவுகள் பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது கட்சியில் தேசியளவிலான பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதவி பறிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அண்ணாமலைக்கு கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அப்செட்டில் உள்ளனர்.

bjp-annamalai-annamalai-supporters-to-work-against-admk-bjp-in-tamilnadu-nda-shocked

அண்ணாமலை அப்செட்

சட்டசபை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2024 நாடாளுமன்ற தேர்தலை போலவே இந்தமுறையும் அண்ணாமலை கோவையில் போட்டியிட விரும்பினார். கோவையில் கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவையில் ஒரு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதியை பாஜகவினர் கேட்டு பெறவில்லை. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அதனால் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியை கேட்டார். அங்கு ஏற்கனவே பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

வேட்பாளர் பட்டியல் பணி

இதனால் அண்ணாமலைக்கு பாஜக தலைமை உறுதி கொடுக்கவில்லை. அண்ணாமலையும் அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையம் வந்தபோது கூட, அண்ணாமலை அவரை வரவேற்க செல்லவில்லை. கட்சி பணிகளில் இருந்தும் அவர் ஒதுங்கியே இருந்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று டெல்லி மேலிடத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

நேற்று தமிழகம் வந்த பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாஜக வேட்பாளர் தேர்வு பட்டியல் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். பாஜக சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரை டெல்லி தலைமை தேர்வு செய்யும். இதில் அண்ணாமலை பெயரும் இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

ஆதரவாளர்கள் தடாலடி முடிவு

இந்நிலையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர் அண்ணாமலையின் அன்பு கூட்டம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தலைமையில், திருப்பூரில் நேற்று ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் அவர்கள், "அண்ணாமலை தலைவரான பிறகு தான், கட்சியினரை தாண்டி இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பாஜக சென்று சேர்ந்தது.

தற்போது அவரை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு சதி செய்துள்ளனர். தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும். அதற்கான தொகுதியை பாஜக தலைமை பெற்றுத்தர வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேலை செய்வோம். மேலும் பாஜக தலைவர்கள் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் முடக்குவோம்" என்று முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+