திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாராபுரம் தொகுதியில் தோல்வி முகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன்.. மாலைமுரசு சர்வே

Google Oneindia Tamil News

திருப்பூர்: தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் தோல்வி முகத்தில் உள்ளதாக மாலைமுரசு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அங்கு திமுக வேட்பாளர் கயல்விழி பெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

234 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை நடத்தி முடிவுகளை மாலைமுரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 151 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் கனவிலும் என்னைப்பற்றிய சிந்தனையால் தூக்கம் இழந்து தவிக்கும் ஸ்டாலின் - இபிஎஸ் கிண்டல் முதல்வர் கனவிலும் என்னைப்பற்றிய சிந்தனையால் தூக்கம் இழந்து தவிக்கும் ஸ்டாலின் - இபிஎஸ் கிண்டல்

அதிமுக, திமுக இடையே 27 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. மநீம சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன், அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மாலைமுரசு கணிப்பில் கூறப்பட்டுள்ளது,

எல் முருகன் போட்டி

எல் முருகன் போட்டி

இங்கு பாஜக தலைவர் எல்முருகன், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியில் உள்ளார். திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கயல்விழி போட்டியில் உள்ளார். அமமுக சார்பில் கலாராணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

முருகனுக்கு எவ்வளவு ஆதரவு

முருகனுக்கு எவ்வளவு ஆதரவு

திருப்பூர் மாவட்டம் தாராரபும் (தனி) தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதால் இது நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. இங்கு திமுக வேட்பாளர் கயல்விழிக்கு 45 சதவீதம் ஆதரவு உள்ளதாக மாலைமுரசு கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல்முருகனுக்கு 41 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்முருகன் தோல்வி முகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மநீம ஆதரவு எவ்வளவு

மநீம ஆதரவு எவ்வளவு

தாராபுரத்தில் அமமுக சார்பில் போட்டியிடும் கலாராணிக்கு 4 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதாவிற்கு 3 சதவீதம் ஆதரவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சார்லிக்கு 3 சதவீதம் ஆதரவும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யாருக்கு ஒட்டு என முடிவெடுக்கவில்லை என 4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

வானதிக்கு தோல்வி முகம்

வானதிக்கு தோல்வி முகம்

பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு கமல்ஹாசன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மாலைமுரசு கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனுக்கு 35 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு 29 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு 24 சதவீதம் பேர் ஆதரவு கிடைத்துள்ளதாம்.

English summary
MalaiMurasu survey report that BJP leader L Murugan on the verge of defeat in dharapuram constituency. he get only 41% support but dmk candidate kayalvili get 45 % support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X