தூயசக்தினு ஏன் இந்த கள்ளத்தனம்.. போதும் உங்க நடிப்பு.. ஆதவுக்கு கம்யூனிஸ்ட் எம்பி பதிலடி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தாலும் சிபிஐ, சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கம்யூனிஸ்ட்களுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார். தூயசக்தி என்று கூறிவிட்டு ஏன் கள்ளத்தன அரசியல் செய்கிறீர்கள் என்று திருப்பூர் எம்பி சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியும், திருப்பூர் எம்பியுமான சுப்பராயன் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "கம்யூனிஸ்ட்டுகளை நோக்கிவினாத் தொடுக்கும் தவெக அமைச்சர்களே.. பாஜக -அஇஅதிமுக அணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை எதற்காக ராஜினாமா செய்ய வைத்தீர்கள். ராஜினாமா செய்தவுடனேயே எதற்காக தவெக உறுப்பினராகச் சேர்த்தீர்கள். அவர்களில் இருவரை தவெக வேட்பாளர்களாகவும் ஏன் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

Communist MP Subbarayan

ஏன் நடிப்பு

இதற்கான அம்மணமான அரசியல் உள்நோக்கம் என்ன தூய சக்தி என்று 'நடிக்கிற' உங்களிடம் ஏன் இந்தக்'கள்ளத்தனம்?'. ஊழலும், முறைகேடும் உறுதிப்படுத்தப்படுமானால் யாராக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்போம். 'கம்யூனிஸ்டுகள்' என்ற சொல்லுக்குள் பிரம்மிக்க வைக்கும் பொருளும், வரலாறும் உறைந்தும், மறைந்தும்கிடக்கிறது. அதை ஊடுறுவிக்காண சமூக விஞ்ஞான அறிவு வேண்டும். அதை வழங்கும் தத்துவத்தின் பெயர்தான் மார்க்சியம்.

எல்லோரும் எல்லாப்பெருஞ்செல்வமும் எய்தலாலே இங்கு இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை என்றது தமிழ்க்கனவு! யாம்பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்றது இந்தியக் கனவ. மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள்,பு ற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையாலிடும்பை தீர்ந்தே இன்பமுற்றன்புடன் இணங்கிவாழ்ந்திடக் கண்ட கனவு உலகக் கனவு. இவற்றைஎல்லாம் மெய்யாக நடைமுறையில் நிறைவேற்றிட வழிகண்டு, உலகிற்கு உணர்த்தியவர்கள்தான் கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் போன்ற மேன்மக்கள்.

தவெக எதிர்வினை

அவர்கள் காட்டிய வழியில் மக்களைப் பண்படுத்தத்தொண்டூழியம் புரிபவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். இந்த சித்திரவதை நிறைந்த பயணத்தில் இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிரை பலி கொடுத்து மறைந்தனர். மறைந்து போன மகாபுருஷர்களுக்கு எனது செவ்வணக்கம்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு தவெகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+