திருப்பூர் மாநகராட்சியை ஜப்தி செய்த அதிகாரிகள்.. அடுத்த நொடியே வந்த காசோலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பணி இழப்பீடு வழங்காத திருப்பூர் மாநகராட்சியை ஜப்தி செய்ய தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது எடுத்து விரைந்து செயல்பட்ட திருப்பூர் மாநகராட்சி உடனடியாக காசோலை வழங்கியது..

திருப்பூர் நகராட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் அருகாமையில் இருந்த வேலம்பாளையம் நல்லூர் நகராட்சிகள் மற்றும் சுற்றிலும் இருந்த வீரபாண்டி, முத்தன்னம்பாளையம், முருகம்பாளையம், ஆண்டிபாளையம், மன்னரை, செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டது.

Tiruppur Corporation

ஊராட்சியில் பணியாற்றிய ஊழியர்களை மாநகராட்சி பணியில் இணைத்துக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டும் வீரபாண்டி ஊராட்சியில் குடிநீர் பணியாளர்களாக பணியாற்றி வந்த விக்டர் ஆரோக்கியசாமி, அந்தோணி ராஜ், சேகர் , முருகேசன் என நான்கு பேருக்கு வேலை வழங்காமல் பணிநீக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் நால்வருக்கும் வேலை வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் நால்வருக்கும் வேலை வழங்கும் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதில் விட்டர் ஆரோக்கியசாமிக்கு 60 வயது ஆகிவிட்டதால் அவர் ஓய்வு வயதை அடைந்து விட்டார் எனவே அவருக்கு வேலை வழங்க முடியாது என்பதால் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை முதன்மை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிட்டம் பல மாதங்கள் ஆகியும் அதனை மாநகராட்சி கொடுக்காததால் திருப்பூர் மாநகராட்சி ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று நோட்டீஸ் வழங்க நீதிமன்ற பணியாளர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக விக்டர் ஆரோக்கியசாமிக்கு வழங்க வேண்டிய ஒரு லட்சத்து 1135 ரூபாய் தொகை காண நீதிமன்ற பணியாளர்களிடம் ஒப்படைத்தனர் .மற்ற மூவருக்கும் வேலை வழங்குவது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+