பொது சிவில் சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பு! ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதி!
திருப்பூர்: பொது சிவில் சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என ஜார்க்கண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான ஆன்லைன் கருத்துக் கேட்பு நடைபெற்று வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் அவரவர் மத நம்பக்கையின் அடிப்படையில் திருமனம், விவாகரத்து, வாரிசு மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றை வெவ்வேறு சட்டங்கள் மூலம் கடைப்பிடிக்கின்றனர். இந்தியாவில் குற்றவியல் சட்டம், தன்டணை சட்டம் பொதுவானதாக உள்ள நிலையில் உரிமையியல் சட்டம் என்று சொல்லப்படும் சிவில் சட்டம் மட்டும் மாறுபட்டிருக்கிறது.

இந்நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இஸ்லாமிய பெண்களுக்கு முழு பாதுகாப்பை தரக்கூடும் எனக் கூறியிருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தனது சொந்த ஊரான திருப்பூர் வந்திருந்த அவர் இதனைக் கூறினார். மேலும், இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் சரியான உரிமை கிடைப்பதற்கு பொது சிவில் சட்டம் வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
திமுகவை பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் பல்வேறு நிலைபாடுகளை எடுக்கக் கூடிய கட்சி என்றும் மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர் மதுவிலக்கை அமல்படுத்தினால் 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ அரசாங்கத்தை நடத்த கஷ்டமாக இருக்கும் என்றும் அதன் பிறகு ஜி.எஸ்.டி.வரி வருவாய் மூலம் நிலைமை சீராகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
தாம் ஆளுநராக இருக்கும் ஜார்க்கண்டில் மரங்களை மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்றும் மரங்களுக்காக பெரியளவில் பண்டிகை கொண்டாடப்படுவதை பார்த்து தாம் அசந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications