கொலையான சிறப்பு எஸ்ஐ உடலை தோளில் சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால்.. கதறிய குடும்பத்தினர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்க சென்ற போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சென்றார். அப்போது அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த எஸ்எஸ்ஐ சண்முகவேலின் உடலை டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் உள்ளிட்ட உயரதிகாரிகள் தோளில் சுமந்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்திக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன். இவர்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

அவர்கள் பணியாற்றும் தோட்டம் மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானதாகும். மகேந்திரன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் பணியாற்றியபோது மூர்த்தி மற்றும் அவரது மகன்ககள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் (வயது 57), போலீஸ்காரர் அழகுராஜா ஆகியோர் அங்கு சென்றனர். பிரச்சனையை தடுக்க முயன்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட கும்பல் எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டி கொன்றுவிட்டு ஓடியது. போலீஸ்காரர் அழகுராஜா காயமடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்எஸ்ஐ-வை வெட்டி கொன்றவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையான சண்முகவேலின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் கொலையான சண்முகவேலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சண்முகவேலின் வீட்டுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட மூத்த அதிகாரிகள் சென்றனர். சண்முகவேலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு சண்முகவேலின் உடலை தோளில் சுமந்து சென்றனர். இந்த வேளையில் சண்முகவேலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சங்கர் ஜிவாலிடம் கதறி அழுதது கண்களை கலங்க வைத்தது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications