தாராபுரத்தில் தட்டித் தூக்குமா தவெக? அக்., 6ல் மக்கள் தீர்ப்பு! பிரம்மாண்ட ரோட் ஷோ நடத்தும் விஜய்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்த நிலையில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பல்வேறு இடங்களில் சாலை வலம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக சத்யபாமா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

Dharapuram By Election

இன்று நண்பகலில் சென்னையிலிருந்து கோவை வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் மாருதி நகர் பகுதிக்கு வருகை தந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் சாலை வழியாக வாகனப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

இந்த தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டிருக்கிறார்.

மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய மதுராந்தகம் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா, சம்பத் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 28 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 9ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் கட்சி என மொத்தம் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. தற்போதைக்கு தாராபுரத்தில் 29 பேர் களத்தில் உள்ளனர்.

அக்டோபர் 6ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தாராபுரம் தொகுதியை பொருத்தவரை அதிமுக ஏற்கனவே வென்ற தொகுதி என்பதால் தமிழக வெற்றி கழகத்துக்கு கடும் போட்டி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+