பரபர தாராபுரம் களம்.. இடைத் தேர்தலில் வரிந்து கட்டும் கட்சிகள்! எத்தனை பேர் களத்தில்? முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வருகிற அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 51 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், தேர்தல் அதிகாரியின் பரிசீலனைக்குப் பிறகு 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனை மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளுக்குப் பிறகு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களான மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா உள்ளிட்ட 6 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

Dharapuram Bypoll Final List

ஒரு சட்டசபைத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், 6 மாத காலக்கெடுவுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். ஆனால் சில தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் காரணமாக அவற்றுக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை, முடிந்துள்ளது. மதுராந்தகம் தனித் தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மீண்டும் சத்யபாமா களமிறங்குகிறார். திமுக தரப்பில் சுகன்யாவும், அதிமுக தரப்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளரான லட்சுமணன் போட்டிருக்கிறார்.

இன்று மாலையுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான நடைமுறை முடிகிறது. தற்போது நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர்.

போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

1. கார்த்திகா - நாம் தமிழர் கட்சி
2. சத்தியபாமா பொ. - தமிழக வெற்றி கழகம்
3. சௌ. கல்பனா - திராவிட முன்னேற்றக் கழகம்
4. பானுமதி க. - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
5. லட்சுமணன் பா. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
6. அருள்ராஜ் கோ. - அனைத்து இந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி
7. ஆறுமுகம் - இந்திய கண சங்கம் கட்சி
8. பெருமாள் - இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி
9. மகேஸ்வரன் - ஆண்டி கரப்சன் டைனமிக் பார்ட்டி
10. சசிபிரியா - சுயேச்சை
11. சத்தியபாமா - சுயேச்சை
12. சதீஷ்குமார் - சுயேச்சை
13. தனலட்சுமி - சுயேச்சை
14. நல்லசாமி - சுயேச்சை
15. பானுப்பிரியா - சுயேச்சை
16. பானுமதி - சுயேச்சை
17. மகேந்திரன் - சுயேச்சை
18. மாரிமுத்து - சுயேச்சை
19. முத்துச்சாமி - சுயேச்சை
20. ராஜரத்தினம் - சுயேச்சை
21. ராஜேஸ்வரி - சுயேச்சை
22. ஜோதிஸ்வரி - சுயேச்சை

இந்நிலையில், இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னம் மற்றும் அதிகாரப்பூர்வ வரிசை எண் ஆகியவை இன்று (19-ந் தேதி) மாலை 4 மணிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+