போஸ்டரால் பஞ்சாயத்து! தவெகவுக்கு ஆதரவாக அதிகாரிகள்? தாராபுரத்தில் போராட்டத்தில் குதித்த நாம் தமிழர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆ தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக சத்தியபாமா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Dharapuram Bypoll

இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் மாருதி நகர் பகுதிக்கு வருகை தந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளில் சாலை வழியாக வாகனப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜய் வருகையையொட்டி அவர் செல்லும் வழித்தடங்களில் சத்யபாமாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, "விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்", "எண் 2 பொத்தானை அழுத்துங்கள்" என்ற வாசகங்களுடன் விஜய் மற்றும் வேட்பாளர் சத்யபாமாவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தாராபுரம், மூலனூர், கோவிந்தாபுரம், காளிபாளையம், கரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக வெளிமாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் அழைத்து வரப்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அலங்கியம் சிக்னல் அருகே சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை நாம் தமிழர் கட்சியினரின் ஆதரவாளர்கள் கவனித்ததாக கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் இருந்ததாகவும், அவற்றை விஜய் செல்லும் வழித்தடங்களில் ஒட்டுவதற்காக எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுவரொட்டிகளை ஒட்டியவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இதுபோன்று சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து சுவரொட்டிகளை ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல் அளித்த பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்தே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அங்கிருந்து சென்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த நாம் தமிழர் கட்சியினர், அவசர உதவி எண்ணான 100-க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சுவரொட்டிகள் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் டாடா ஏசி வாகனத்தையும் அதில் இருந்த சுவரொட்டிகளையும் தாராபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால், நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து சென்ற பின்னர், அந்த வாகனத்தை மீண்டும் எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியினர், காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தாராபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் நள்ளிரவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டியதாக கூறப்படும் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தாராபுரம் காவல்துறையினரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிலிக்ஸ் ராஜாவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+