விஜய்க்கு கைகொடுக்காத தாராபுரம் வஞ்சியம்மன் கோயில்! கவுண்டர்கள் மூலம் எடப்பாடி தந்த கவுண்டர் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் தனித்தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்பட்டதில் இருந்தே களத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றிருந்தாலும், இயந்திர வாக்குகள் எண்ணத் தொடங்கியதும் அதிமுக முன்னிலை பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தற்போதைய இவிஎம் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக வேட்பாளர் கே. பானுமதி 9308 வாக்குகளைப் பெற்று முதலிடத்திலும், தவெக வேட்பாளர் பி. சத்யபாமா 8977 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா 7098 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆளும் தவெக-வை விட 331 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் நீடிக்கிறது.

இந்தத் திடீர் முன்னிலைக்குப் பின்னால் கொங்கு மண்டலத்தின் முக்கியமான சாதி வாக்கு சமன்பாடுகள் மற்றும் சமுதாய மக்களின் வாக்கு ஒருங்கிணைப்பு மிக முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அப்பகுதியில் கணிசமாக உள்ள கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் வாக்குகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குப் பெருமளவில் கைகொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Dharapuram Bypoll Results Gounder Caste Vote Factor Sparks AIADMK Lead as Vijay s Temple Visit Fails to Deliver

சாதி ரீதியிலான வாக்குகள்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி ஒரு தனித்தொகுதியாக (SC) இருந்தாலும், இங்கு தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் இதர சமூக வாக்குகளே பெரும்பங்கு வகிக்கின்றன. தாராபுரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 26 முதல் 28 சதவீதம் வரை பட்டியலின சமூகத்தினர் (குறிப்பாக அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள்) உள்ளனர். ஆனால், தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் பெரும்பான்மை சமுதாயமாக கொங்கு வேளாள கவுண்டர் சமுதாய மக்கள் விளங்குகின்றனர். இவர்கள் இத்தொகுதியில் சுமார் 35 முதல் 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டுள்ளனர். இவர்களுடன் நாயக்கர், செட்டியார், நாடார் மற்றும் சிறுபான்மையின வாக்குகள் சுமார் 30 முதல் 35 சதவீதம் வரை பரவலாக உள்ளன. தனித்தொகுதி என்பதால் அனைத்துக் கட்சிகளும் பட்டியலின வேட்பாளர்களைக் களமிறக்கினாலும், கவுண்டர் சமூக மக்களின் வாக்குகளை யார் அதிகமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வசமாகும் என்பதே தாராபுரத்தின் பாரம்பரிய அரசியல் வரலாறு.

இந்த சாதி சமன்பாட்டை முன்கூட்டியே கணித்த தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் மிகப்பெரிய அரசியல் நகர்வை மேற்கொண்டார். தாராபுரத்திற்கு உட்பட்ட மூலனூர் அருகேயுள்ள புகழ்பெற்ற வஞ்சியம்மன் கோயிலுக்கு நேரில் சென்று மனமுருக வழிபாடு நடத்தினார். 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மூலனூர் வஞ்சியம்மன் கோயில், கொங்கு வேளாள கவுண்டர்களின் பூசன், சேரலான் உள்ளிட்ட குலத்தவர்களுக்கும் மற்றும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் மிக முக்கியமான குலதெய்வ வழிபாட்டுத் தலமாகும்.

விஜய்க்கு உதவாத கோவில்

கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய பண்பாட்டோடும், கவுண்டர் சமூகத்தின் குலதெய்வ உணர்வுகளோடும் நேரடியாகத் தொடர்பு கொண்ட இந்தத் தலத்திற்கு விஜய் சென்றது, அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் தவெக வேட்பாளர் சத்யபாமாவிற்குத் திருப்பும் வியூகமாகவே கருதப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளில் வெளியாகும் தற்போதைய இவிஎம் வாக்குகள், விஜய்யின் அந்த ஆன்மீக-அரசியல் நகர்வு எதிர்பார்த்த அளவிற்கு கவுண்டர் சமூக வாக்குகளை தவெக பக்கம் இழுக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.

அதிமுகவின் முக்கிய சீனியர் தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டாத நிலையிலும், எடப்பாடி பழனிசாமி மீதான கொங்கு மக்களின் சமுதாயப் பிணைப்பும், இரட்டை இலை சின்னத்திற்கான பாரம்பரிய வாக்கு வங்கியும் சிதறாமல் அப்படியே அதிமுகவிற்கு விழுந்திருப்பதாகத் தெரிகிறது. சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவராக எடப்பாடி பழனிசாமியை கொங்கு மண்டல மக்கள் கைவிடவில்லை என்பதையே இந்த ஆரம்பகட்ட முன்னிலை உணர்த்துகிறது.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சத்யபாமாவை இழுத்து, வஞ்சியம்மன் கோயிலுக்கும் சென்று விஜய் முன்னெடுத்த அதிரடி வியூகங்களை முறியடித்து, தாராபுரக் கிராமப்புற வாக்குச்சாவடிகளில் அதிமுக முன்னிலை பெற்று வருவது தவெக தலைமைக்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது. இருப்பினும் தவெக மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியிருப்பதால், நகர்ப்புற வாக்குகள் மற்றும் அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமை மாறுமா என்ற விறுவிறுப்பு தொடர்ந்து நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+