போன தேர்தலுக்கு 31 கோடி ரூபாய் செலவு பண்ணேன்.. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசும் வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ள சத்யபாபாமா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த தேர்தலில் 31 கோடி செலவு செய்தேன் என சத்யபாமா பேசும் காட்சிகள் அரசியலில் அதிர வைத்துள்ளது.

தேர்தல் ஆணையம் விதிப்படி ஒரு வேட்பாளர் 45 லட்சம் மட்டுமே தேர்தல் செலவுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் சத்யபாமாவே கடந்த தேர்தலில் 31 கோடி செலவு செய்ததாக பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dharapuram Dharapuram By Election TVK

சத்யபாமா பேசுவது போல் வீடியோ

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுபவர் சத்யபாமா. சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தேர்தல் முடிந்த சில நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த கையோடு அவருக்கு போட்டியிட வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இதனால், பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் விரட்டியடித்ததையும் பார்க்க முடிந்தது.

பிரசாரம் முடிந்து இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சத்யபாமா பேசும் சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யபாமா அந்த வீடியோவில் பேசியதாவது:- "போன தடவை 31 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறேன். ஒரு பைசா கொடுக்கவில்லை" என்று பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Dharapuram Dharapuram By Election TVK

நடவடிக்கை பாயுமா?

தேர்தல் ஆணையம் விதிப்படி ஒரு வேட்பாளர் 45 லட்சம் மட்டுமே தேர்தல் செலவுக்காக செலவு செய்ய வேண்டும். எவ்வளவு செலவு செய்தோம் என்பதையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அப்படி இருக்கும் போது சத்யபாமாவே 31 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக பேசும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசும் வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டால் சத்யபாமா மீது தேர்தல் நடவடிக்கை பாயலாம் எனவும் சொல்லப்படுகிறது.

தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தவெக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து குதிரை பேரம் நடத்தியிருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் தற்போது 31 கோடி செலவு செய்தேன் என்று கூறும் சத்யபாமா? எதன் அடிப்படையில் ராஜினாமா செய்தார் என்று வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.

தவெகவில் சேர்ந்த கையோடு, சீட் வழங்கிய விஜய், சத்யபாமாவுக்காக இரண்டு நாட்கள் தீவிர பிரசாரம் செய்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் தாரபுரம் வந்த விஜய், 30 கிலோ மீட்டர் சாலைவலம் சென்றார். ஒன்றிரண்டு ஆட்கள் இருந்தால் கூட அவர்களை பார்த்து வாக்கு சேகரித்தார் விஜய். அதேபோல தவெக தொண்டர்களும் இரவு பகல் பாராமல் சத்யபாமாவுக்கு தீவிரமாக தேர்தல் வேலை பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+