தவெக ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் தராங்க.. நீங்களும் தருவீங்களா? வாக்காளர் கேள்வியால் அதிர்ந்த திமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிக்க திமுகவினர் சென்ற போது, வாக்காளர் ஒருவர் தவெக கட்சி ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார்கள்.. நீங்கள் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து, எந்தக் கட்சி இப்படி சொன்னார்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டு விசில் கட்சியா என்று கேட்கின்றனர். அதற்கு வாக்காளரும், விசில் கட்சி என்று பதில் அளிக்கிறார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் என்று 5 முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு, தவெகவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

DMK

அதேபோல் திமுக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இந்த இடைத்தேர்தலை தீவிரமாக எடுத்து கொண்டு பணியாற்றி வருகிறார். குறிப்பாக தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தாராபுரம் தொகுதியில் அதிகளவிலான நிர்வாகிகளை இறக்கி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் தாராபுரம் தொகுதியில் பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் முதல் நாள் பிரச்சாரத்தை முடித்துவிட்டார்.

அடுத்தக் கட்டமாக திமுக தலைவர் ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த முறை திமுகவினர் பொதுக்கூட்டம், மேடை என்று இல்லாமல் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளரையும் பார்த்து வாக்கு கேட்டு வருகின்றனர். அப்படி திமுக தரப்பு வாக்காளர் ஒருவரிடம் நோட்டீஸ் கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர். அதற்கு அந்த வயதான வாக்காளர், தவெகவுக்கு வேலை பார்க்கும் கட்சிக்காரர்கள் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் தருவோம் என்று சொல்கிறார்கள்.

விசில் கட்சி தான் அப்படி சொன்னாங்க என்கிறார். அப்போது திமுகவினர், மேடை தோறும் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று விஜய் சொல்கிறார் என்று கூற, வாக்காளர் தரப்பில், இப்படியும் சொல்கிறார்கள்.. அப்படியும் சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் வேட்பாளருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணிகளை தவெக தொடங்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+