கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ்.. தவெக எம்எல்ஏ மீது புகார்.. தினகரன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம் எல் ஏ மீது புகார் எழுந்துள்ளது. கொடூர வில்லன்களின் கூடாரமா தமிழக வெற்றிக் கழகம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

டிடிவி தினகரன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, அவரது இல்லத்திற்கே சென்று விரும்பத் தகாத முறையில் நடந்து கொண்டதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Kallakurichi TTV Dhinakaran tvk

பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில் தொடங்கி, சொந்த கட்சி நிர்வாகியையே காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை என பெண்களை ஆபாச பொருட்களாக நினைக்கும் தவெக கட்சி நிர்வாகிகளின் மீது ஆளும்கட்சியாக இருந்தும் எந்தவித உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த தவெக தலைமையால், இன்று மாவட்டத்தின் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்க முயலும் அளவிற்கான சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம், மக்கள் பிரச்னையை புகாராக அளிக்க வந்த நபர் மீது தாக்குதல், மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை என மக்கள் பணி செய்வதற்காக தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்த எம்.எல்.ஏக்கள் செய்யும் கேவலமான செயல்கள், தவெக கட்சி என்பது திரையில் நாம் காணும் கற்பனை வில்லன்களை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மக்களுக்காக பணிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே, ஒரு மாவட்டத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கான சூழல் நிலவும் தமிழகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உட்பட தமிழகத்தின் அனைத்து மகளிருக்குமான பாதுகாப்பை வழங்குவது யார்? என்ற கேள்வியே தற்போது பிரதானமாக உள்ளது.

எனவே, மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் "NO COMPROMISE" என வெட்கமில்லாமல் பேசுவதற்கு முன்பாக தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்கே சென்று அருவருக்கத்தக்க வகையில் செயல்பட்டதாகவும் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.


தவெக எம்எல்ஏ மறுப்பு

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் இதுபற்றி கூறும் போது, இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி வீட்டிற்கு சென்று பிரச்னை செய்ததாக கூறுவதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அவ்வாறு தான் செய்ய முடியுமா? கலெக்டருக்கு நான் எதற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்?நான் தவறான கண்ணோட்டத்தில் எவ்வித குறுந்தகவலும் அனுப்பவில்லை. ஒரு மாவட்டத்தின் உயர் பதவியில் இருப்பவரிடம், எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும். இது முழுக்க முழுக்க, தி.மு.க., - ஐ.டி., விங் வாயிலாக பரப்பப்படும் பொய்யான தகவல் என்று கூறியுள்ளார். என்ன நடந்தது என்பதை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்தால் தான் முழுமையாக விவரம் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+