திருப்பூரை கொத்தாக அள்ளிய திமுக - அதிமுக நிலவரம் கலவரம்தான்... ஏன் இப்படியாச்சு?
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது.
திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் திமுக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. அம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி வெற்றிவாகை சூடி அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன் பூண்டி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் வெள்ளக்கோவில் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன.

இந்த நகராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.
இதன்முடிவுகள் வெளியான நிலையில் , திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, திருமுருகன்பூண்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 17 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேபோல், பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 இடங்களில் திமுக 14 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், அதிமுக, சுயேட்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல், தாராபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 23 இடங்களில் வென்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதிமுக 3 இடங்களிலும், பாஜக மற்றும் சுயேட்சை தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். .
வெள்ளக்கோவில் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 இடங்களில், 15-ல் திமுக கூட்டணியும், 6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல், உடுமலைப்பேட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 21-ல் திமுகவும், 4 இடங்களில் சுயேட்சைகளும், 3 இடங்களில் அதிமுகவும் வென்றுள்ளது. 5 வார்டுகளில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
காங்கேயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில், திமுக கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கொங்குமண்டலத்தில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மாநகராட்சிகளை வசப்படுத்தியதோடு நகராட்சிகளையும் கொத்தாக அள்ளி அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications