திருப்பூரில் திடுக் சம்பவம்.. அதிர்ந்து போன அரசு பேருந்து ஓட்டுநர்! போதை ஆசாமி செயலை நீங்களே பாருங்க
திருப்பூர்: போதையில் பேருந்து ஓட்டுநரின் மடியில் அமர்ந்து இளைஞர் தகராறு செய்த சம்பவம் திருப்பூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார், பேருந்திலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து, பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
சந்தோசத்திலும், துக்கத்திலும் குடிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், குடித்துவிட்டு அடுத்தவர்களின் சந்தோஷத்தை கெடுப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குடித்துவிட்டு அரசு பேருந்து சக்கரத்திற்கு அடியில் படுத்துக்கொள்வது, வேகமாக வரும் பேருந்துக்கு முன்னாடி சென்று நின்று பில்டப் செய்வது என மது விரும்பிகளின் அழிச்சாட்டியங்கள் அன்றாடம் வீடியோவாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வரிசையில் திருப்பூரிலிருந்து திகைப்பூட்டும் வீடியோ ஒன்று ரிலீசாகியுள்ளது. அதாவது அரசு பேருந்தில் போதை ஆசாமி ஒருவர், பயணித்திருக்கிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென ஓட்டுநரின் மடியில் போய் உட்கார்ந்துவிட்டார். அவ்வளவுதான் அரசு பேருந்து ரோட்டை மறித்துக்கொண்டு நின்றுவிட்டது. சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல். நடத்துனர் எவ்வளவு அழைத்தும், போதை ஆசாமி ஓட்டுநரின் மடியிலிருந்து எந்திரிக்கவில்லை.
பயணிகள் திட்டியும் பார்த்துவிட்டனர்.. பிரயோஜனம் இல்லை. கடைசியாக வேறு வழியின்றி போலீசுக்கு அழைக்க.. அவர்களோ, நெரிசலில் நீண்ட நேரம் நீந்தி கடைசியாக பேருந்துக்கு வந்து சேர்ந்து, போதை ஆசாமியை அழைத்து சென்றிருக்கின்றனர். வழக்கமா சண்டே தானே இந்த கூத்தெல்லாம் நடக்கும், இன்னைக்கு புதன்கிழமையாச்சே.. என பேருந்து பயணிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

சரி ஏன் ஆல்கஹால் மனிதர்களை வித்தியாசமாக நடந்துக்கொள்ள செய்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். ஆல்கஹால் மனித மூளையின் செயல்பாடுகளை மந்தமாக்குகிறது. இதனால் அதை பருகியவர்கள் உடனடியாக உற்சாகமடைவார்கள். அதேபோல பக்கத்தில் இருப்பவர்களிடம் அதிக அக்கறை காட்டுவார்கள். குறிப்பாக ஆல்கஹால் சிந்தனையை பாதிக்கிறது. நாம் என்ன செய்கிறோம் என்கிற சிந்தனை இருந்தால்தானே அதை தெளிவாக செய்ய முடியும்?
கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய மர்ம நபர் ஒருவர் ஓட்டுநர் மடியில் அமர்ந்து தான் பயணிப்பேன் எனக் கூறி அடம்பிடித்தவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/SkVPO0zqGk
— RAJESH (@vrajesh0604) October 24, 2024
இன்னும் சிலர், ஆல்கஹால் குடித்த பின்னர், "நான் நல்லாத்தான் இருக்கேன். தெளிவா இருக்கேன்.. பிரச்சனை இல்லை" என்பதை போல நடந்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் இதுதான் அவர்கள் குடித்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக காட்டிக்கொடுக்கும். இறுதியாக இது நரம்பு மண்டலத்தை பாதித்து அவர்களை மனச்சோர்வுக்கு ஆளாக்கிவிடும். அதனால்தான் குடித்த பின்னர் நிறைய உளறுகிறார்கள்
ஆல்கஹால் நீண்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ளும் போது, அது நரம்பு மண்டலத்தையும், சிந்தனை திறனையும் கடுமையாக பாதிக்கிறது. இதனால் பல்வேறு நோய்களும், உடல் சார்ந்த உபாதைகளும் ஏற்படுகின்றன. இறுதியில் இது மரணத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே போதையை தவிர்ப்போம்.. ஆரோக்கியமாக வாழ்வோம்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications