தொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்!
தொடர் மழை காரணமாக திருப்பூரில் உள்ள அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் அது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
Recommended Video

திருப்பூர்: தொடர் மழை காரணமாக திருப்பூரில் உள்ள அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் அது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மும்பை, கேரளா, புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை வருகிறது. அதேபோல் நேற்று திருப்பூரில் கனமழை பெய்து வருகிறது.
திருப்பூரில் பெய்து வரும் கனமழையால் உடுமலை அமராவதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மழையில் இருந்து வேகமாக தண்ணீர் அமராவதி அணைக்கு வருகிறது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 2,272 கனஅடி நீர் அணைக்கு வந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அமராவதியில் வினாடிக்கு நீர்வரத்து 10350 கன அடியாக உள்ளது. ஒரே இரவில் இவ்வளவு அதிக அளவில் அங்கு நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.
இதனால் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 16 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று 48 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 16 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணை தற்போது 64 அடி நீர் நிறைந்து உள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்டது அமராவதி அணை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் அது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications