கமலாலயம் எழுதி தரும் அறிக்கையை.. அதிமுக லெட்டர் பேடில் வெளியிடுகிறார் எடப்பாடி! ஸ்டாலின் தாக்கு
திருப்பூர்: திமுக மேற்கு மண்டல மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர் பேடில் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார் என்றும் 100 நாள் வேலைத் திட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாகவே எடப்பாடி பழனிசாமி பேசுவதாகவும் ஸ்டாலின் சாடினார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு இன்றைய தினம் திருப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறுகையில், "எப்போதும் தேர்தல்களில் திமுக தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும்.. அதைத் தயாரிக்கும் பொறுப்பு கனிமொழிக்கு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருந்தார். அந்தத் தேர்தலில் திமுக தான் 100% வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த முறையும் தேர்தல் அறிக்கையைக் கனிமொழி தான் தயாரிக்கிறார். எனவே, இந்த முறையும் திமுக வெல்வது உறுதி!" என்றார்.
மேலும், திராவிட இயக்கம் தொடக்கம் முதலே பெண்களின் பங்கு இருந்துள்ளது. நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திமுக வரலாற்றில் பெண்கள் பங்கு இருக்கிறது என்ற அவர், அண்ணா தலைமையில் அமைந்த திமுகவின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும் பெண்களின் பங்கு இருந்ததாகக் குறிப்பிட்டார். தொடக்கம் முதலே திராவிட இயக்கத்தில் பெண்கள் பங்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "100 நாள் வேலை விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.. கமலாலயத்தில் எழுதித் தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர் பேடில் வெளியிடுகிறார் எடப்பாடி.. பாஜகவினரே கூச்சப்படும் அளவுக்கு, 100 நாள் வேலைத் திட்ட ரத்துக்கு எடப்பாடி முட்டுக் கொடுக்கிறார்" என்றார்.
100 நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய பாஜக அரசு, இந்த திட்டத்தை நீக்கிவிட்டு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. இதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் இயற்றி இருந்தது. 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசே முழுச் செலவையும் ஏற்கும் நிலையில், புதிய திட்டத்தில் 40% நிதியை மாநில அரசு ஏற்க வேண்டும். இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இந்த புதிய திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications