ஆபரேசனில் பலியான அதிமுக..பாழ்படுத்திய பாஜகவுடன் கள்ளக் கூட்டணி..! எடப்பாடியை விளாசிய மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பாஜகதான் எனவும், பாஜகவை எதிர்த்து பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது, அரசியல் நடத்தவும் முடியாது என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்றது.

Edappadi Palaniswami cannot run a party against the BJP says DMK leader MK Stalin

இதில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்கு சேகரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்: அப்போது பேசிய அவர்," நாட்டையே பாழ்படுத்திய பாஜகவுடன் பழனிசாமி கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு வருகிறார். பழனிசாமிக்கும் 'தமிழ்நாடு பாஜகவுக்கும் தான்' பிரச்சனையே தவிர - அவருக்கும் மோடி - அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம்.

Edappadi Palaniswami cannot run a party against the BJP says DMK leader MK Stalin

பாஜக சதி: ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பாஜகவை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது. ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பாஜக தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை - தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பாஜக தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பாஜகதான்.

டிடிவி தினகரன்: தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து - அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பாஜக தான். இன்று பன்னீர் செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜக தான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பாஜக தான். பழனிசாமியைத் தனியாக நிற்க வைத்ததும் பாஜக தான்.

டிவி சீரியல் கதை: இப்படி டிவி சீரியலில் திடீர் திடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி - சதி நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பாஜக தலைமை! உறுதியோடு சொல்கிறேன்! இந்தத் தேர்தலில் நேரடி பாஜகவும் மண்ணைக் கவ்வும்! பாஜகவின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள்! தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும்- தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்துங்கள்" என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+