"பாசம்னா தாய் தந்தையுடன் வாழ வேண்டும்.. கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும்”.. இறங்கி அடிக்கும் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "பாசம் என்று சொன்னால்.. தாய் தந்தையுடன் வாழ வேண்டும், கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழவேண்டும்" என தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

EPS

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தாராபுரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தாராபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின்போது தமிழக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுகவினரை வைத்துத்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் வந்துவிட்டது. தமிழகத்தை ஆள்வது அதிமுகதான். அதிமுகவினரை நம்பியே விஜய் அரசியல் செய்கிறார். அதிமுகவினரின் கதவை ஏன் தட்டிப் பிச்சை எடுப்பதுபோல் வாக்கு சேகரிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், "உங்கள் வீட்டில் அண்ணனாக இருப்பேன்.. தம்பியாக இருப்பேன்.. மாமனாக இருப்பேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பச்சைப் பொய்.. பாசம் என்று சொன்னால்.. தாய் தந்தையுடன் வாழ வேண்டும், கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும். பெற்ற பிள்ளைகளோடு வாழவேண்டும்.

மேடைகளில் வீரவசனம் பேசினால் மட்டும் போதாது. நிஜ வாழ்க்கையிலும் அதனைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும். நாங்கள் வாழ்ந்து காட்டுகிறோம். மனைவி, பிள்ளைகளுடன் வாழ்வதுதான் உண்மையான பாசம். மக்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசி வாக்குகளைப் பெறுபவர்தான் விஜய்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+