சின்னத்தம்பியை சீக்கிரம் பிடியுங்கள்.. விவசாயிகள் திடீர் போராட்டம்..ஏன், என்னாச்சு?
Recommended Video

திருப்பூர்: சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
கோவையில் இருக்கும் தடாகம் பகுதியில்தான் இந்த சின்னத்தம்பி தனது குடும்பத்துடன் இருந்தது. ஆனால் இந்த சின்னத்தம்பி விவசாய நிலங்களை நாசம் செய்கிறது என்று சில விவசாயிகள் புகார் அளிக்கவே இது இடமாற்றம் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி 25ம் தேதி வனத்துறை அதிகாரிகள் இதை பிடித்து சென்று டாப்சிலிப் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் அங்கிருந்து அது தப்பித்து வெளியே வந்தது.

பெரிய பயணம்
தற்போது தனது குடும்பத்தை தேடி இது தடாகம் காட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். சின்னத்தம்பி யானையை இன்னும் காட்டுக்குள் அனுப்ப முடியாமல் வனத்துறை கஷ்டப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி மிகவும் மெதுவாக செல்வதால், அதனால் தனது காட்டிற்கு சீக்கிரம் செல்ல முடியவில்லை.

என்ன பிரச்சனை
முதலில் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற வனத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த முடிவை அரசு கைவிட்டது. மேலும், அந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விட அரசு முடிவெடுத்து இருக்கிறது.

என்ன பிரச்சனை
கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலையில் இருந்து இடம்பெயர்ந்த சின்னத்தம்பி யானை தற்போது உடுமலை பேட்டை அருகே இருக்கிறது. அங்குள்ள விளைநிலங்களில் இது தஞ்சம் புகுந்து இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் விளைநிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

போராட்டம் செய்கிறார்கள்
இதனால் தற்போது சின்னத்தம்பி யானையை வேகமாக பிடிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள். சின்னதம்பி யானையை உடனே பிடிக்கக் கோரி உடுமலைபேட்டையில் சாலைமறியல் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சின்னத்தம்பி வயல் வழியே செல்வதால் நிலம் பெரிய அளவில் சேதம் அடைவதாக அவர்கள் புகார் வைக்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications