திருப்பூர் அருகே 10 வயது சிறுமி மர்ம மரணம்! தூக்கில் தொங்கியிருந்த துப்பட்டா யாருடையது?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே பாட்டியின் வறுமையைக் கண்டு மனமுடைந்த 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவிய நிலையில், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அறிவொளி நகரைச் சேர்ந்த நாகராஜ் மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

thiruppur crime

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வெண்ணிலா தான் பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டாராம்.

அது போல் தந்தையான நாகராஜும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாகச் சென்றுவிட்டார்.

இரு குழந்தைகளையும் நாகராஜின் தாய் பொன்னம்மாள் பராமரித்து வந்தார். மூதாட்டி பொன்னம்மாள் கூலி வேலைக்குச் சென்று பராமரித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிறுமி நந்திதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

பாட்டியின் வறுமை தாளாத சோகத்தில் சிறுமி, தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவிய நிலையில், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது போல தெரிவதாகவும், இந்த விஷயத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சிறுமியின் பாட்டியும், தந்தை நாகராஜும் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டில் மூன்றாம் நாள் இறுதி காரியங்களை செய்து அஞ்சலி செலுத்திய நிலையில், சிறுமியின் தந்தை நாகராஜ், பாட்டி ஆகியோர் கூறியிருப்பதாவது: சிறுமியை தந்தை நாகராஜ் தொடர்ச்சியாக வந்து பார்த்துக் கொண்டதாகவும், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த சிறுமி மிகவும் சுறுசுறுப்பாகவும், அக்கம்பக்கத்தினரிடம் எளிதில் பழகக்கூடியவராகவும் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர் கூட மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்ததாகவும், சிறுமி தூக்கில் தொங்கியிருந்த துப்பட்டா தங்கள் வீட்டை சார்ந்தது இல்லை என்றும், அவர் தூக்கில் தொங்கிய உயரத்தில் அவரால் தூக்குப் போட முடியாது என்பதால் யாரோ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பக்கத்து தெருவில் இருந்து ஷாம்பு எடுத்து வந்ததால் அவர்கள் திட்டியதில் இந்த முடிவுக்கு வந்தாரா என்று தெரியவில்லை என்றும், போலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் சிறுமியின் தாய் வழிப்பாட்டி கூறுகையில், என் மகள் தவறு செய்து போய் விட்டாலும், மருமகனும், அவரது தாயும் சிறுமியை நன்றாக பார்த்துக் கொண்டதாகவும், சிறுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாய், தந்தை பிரிந்து சென்றுவிட்ட நிலையில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமியின் மர்ம மரணத்தால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+