தங்க நகை அடகு.. 3 லட்சத்துக்கு அரசு வங்கி, தனியார் வங்கி, நிதி நிறுவனங்களில் வட்டி எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நண்பர் ஒருவர் அவசரத்திற்கு தங்க நகை அடகு வைக்க, தமிழ்நாட்டின் மிக பிரபலமான தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார். எப்படியும் அடுத்த மாதம் திருப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் போனார். அவருக்கு 2. 5லட்சம் பணம் தேவைப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் திருப்பிவிடுவோம் என்ற நம்பிக்கையில் அடகு வைத்தார். வட்டி விகிதம் 13.5 சதவீதம் என்றார்கள். ஆனால் அவசர தேவைக்காக அடுத்தமாதமே கூடுதலாக 50000 வாங்கினார். அவரது கடன் வட்டி விகிதம் 24 சதவீதம் ஆக மாறியது. ஓராண்டுக்கு அவரால் திருப்ப முடியாதநிலை ஏற்பட்டது. அதற்கு அவர் கட்டி வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா? அதே மூன்று லட்சத்தை தேசியமயமாக்கப்பட்ட தனியார் வங்கியிலோ அல்லது அரசு வங்கிகளிலோ வாங்கியிருந்தால் எவ்வளவு வட்டி தெரியுமா? விரிவாக பார்ப்போம்.

மகன் கல்லூரிச் சேர்க்கைக்கான கடைசித் தேதி, தாயின் அவசர அறுவைச் சிகிச்சை, அல்லது கட்ட வேண்டிய வீட்டுக்கடன் தவணை... நடுத்தர வர்க்கத்து மனிதன் வேறு வழியே இல்லாத போதுதான், தன் வீட்டின் ஆகச்சிறந்த சேமிப்பான, மனைவியின் கழுத்து நகையைக் கழற்றி அடகுக் கடை நோக்கி நடப்பது நம்மூரில் சர்வ சாதாரணம். பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று நகையை அந்த நாளில் அடகு வைக்கமாட்டார்கள். வெள்ளிக்கிழமையும் அடகு வைக்க மாட்டார்கள். மற்ற நாட்களில் தான் அடகு வைப்பார்கள். சாமானிய மக்களுக்கு தங்கம் வெறும் ஆபரணம் அல்ல; அவர்களின் மூச்சுக்காற்று.

Gold Loan Reality Check Yearly Interest For 3 Lakh in Govt vs Private Banks amp amp NBFCs

ஆனால், அந்தப் பெருமூச்சை மூலதனமாக்கி, நம் உழைப்பை வட்டி என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனங்கள் எப்படிக் உறிஞ்சுகின்றன தெரியுமா? மூன்று லட்சம் ரூபாய் தேவைக்காக ஒருவன் தன் குடும்ப நகையை அடகு வைக்கும் போது, அவர் எங்கே கடன் வைக்க போகிறார் என்பதை பொறுத்து மாறுபடுகிறது. விஷயத்திற்கு வருவோம்..

அரசு வங்கிகளின் (எஸ்பிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி) பக்கம் ஒதுங்கினால், அங்கே வட்டி விகிதம் 8.8 சதவீதம் என்ற அளவில் ஓரளவிற்கு நிம்மதி தருகிறது. 3 லட்சத்திற்கு ஆண்டு வட்டி வெறும் ₹26,400 மட்டுமே. மாதம் ₹2,200 கட்டினால் போதும், கௌரவமாக நகையை மீட்டுவிடலாம்.

அதுவே சற்றே பளபளப்பான தனியார் வங்கிகளின் படியேறினால், வட்டி 11 சதவீதமாக எகிறுகிறது. ஆண்டு வட்டி ₹33,000 ஆக உயர்கிறது. அதாவது, அரசு வங்கியை விடக் கூடுதலாக ₹6,600 மக்கள் பணம் இங்கே பறிபோய்விடும். ஆனால், "ஐந்தே நிமிடத்தில் கடன், ஆவணங்கள் தேவையில்லை" என்று டிவி விளம்பரங்களில் நம்மை அன்போடு அழைக்கும் தனியார் நிதி நிறுவனங்களின் (NBFC) நிஜ முகம் உங்களை உலுக்கிவிடும். அங்கே வட்டி விகிதம் அநியாயமாக 24 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. 3 லட்சத்திற்கு ஒரு வருடத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா? அச்சுறுத்தலாக ₹72,000!

யோசித்துப் பாருங்கள்... ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதன் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் மாதம் ₹6,000-ஐ வட்டியாக மட்டுமே அழ வேண்டும். ஓராண்டில் வட்டி மட்டுமே அசல் தொகையில் கால் பங்கை விழுங்கிவிடும். அவசரத்திற்குப் பணம் தருகிறார்கள் என்பது நிஜம்தான். ஆனால், ஒரு ஏழையின் இயலாமையைப் பயன்படுத்தி, அரசு வங்கியை விட மூன்று மடங்கு வட்டி வாங்குவது பகற்கொள்ளை அடிக்கிறார்கள். நகையை அடகு வைக்கும் முன் யோசியுங்கள் ... உங்கள் உழைப்பின் வியர்வை சொற்ப வட்டியோடு முடிய வேண்டுமா, அல்லது தனியார் நிறுவனங்களின் கல்லாவை நிரப்ப வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்! என் நண்பன் யோசிக்காமல் செய்த செயலால் பல ஆயிரம் பணத்தை நிஜமாகவே இழந்துள்ளார். நீங்கள் இழக்கக்கூடாது என்றால் கவனமாக முடிவெடுங்கள்.

தனியாரில் வைக்கவே கூடாதா என்றால், அப்படி சொல்லவில்லை. வங்கிகளால் தரவே முடியாத பணத்தை தனியார் நிதி நிறுவனங்கள்தான் தருகின்றன. அவர்களிடம் வாங்கும் பணத்தை அடுத்த மாதமே உங்களால் திருப்பி தர முடியும் என்றால், தாராளமாக வாங்கலாம். மாறாக கைமாற்று மாதிரி பயன்படுத்த தனியார் நிதி நிறுவனங்கள் உங்களுக்கு உதவலாம். மாறாக நீங்கள் மொத்தமாக தனியாரில் அதிக பணத்திற்காக மட்டுமே அடகு வைத்தால், நகையை மறந்துவிடுங்கள். ஏனெனில் நம்மூர் பொருளாதாரம் மற்றும் நம்முடைய கடன்களை அடைப்பது என்று எதார்த்தத்தில் எளிதானது இல்லை.. ஏனெனில் புதிது புதிதாக செலவுகள் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் என்னதான் முட்டி மோதினாலும் அடைக்கவே முடியாமல் போகும் வாய்ப்பு அதிகம் என்பதே கசப்பான உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+