Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் அந்தரத்தில் நின்ற உலக்கை.. திண்டுக்கல்லில் கிரகண நேரத்தில் நாகரத்தினம் பண்ண வேலை.. செம

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாகவும், முழு சந்திர கிரகணமாகவும் நேற்றிரவு தோன்றி ரத்த நிலவை பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதனை பொதுமக்கள் காண்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் செப்டம்பர் நேற்றிரவு தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. முழுமையான கிரகணம் 82 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்நிலையில் திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.

இந்த வருடத்தின் கடைசி சந்திரகிரகணம் நேற்றிரவு தென்பட்டது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு சரியாக நேற்றிரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது..

Tiruppur Lunar eclipse plunger

இதனால் இந்த அரியநிகழ்வை, தொலைநோக்கிகள் மூலம் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.. எனவே பொதுமக்கள் இங்கு முன்கூட்டியே குழந்தைகளுடன் ஆர்வத்துடன் குவிந்தனர்.

கிரகணம் - கோயில்கள்

கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சவுந்தரராஜபெருமாள், நத்தம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டு, இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதேபோல, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடையானது நேற்றிரவு 8 மணி அளவில் சாத்தப்பட்டது. இதன்பிறகு தங்க ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து அங்கு தீர்த்தவாரி உற்சவமானது நடைபெற்றது.

ராமேஸ்வரம் பக்தர்கள்

பிறகு இரவு ராமேஸ்வரம் வருகை தந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் சந்திர கிரகணம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அக்னி தீர்த்த கடற்கரையில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு கடலில் புனித நீராடினார்கள்..

சந்திரகிரகணத்தில் ஒரு பணி செய்தால் பல முறை அதனை செய்ததற்கான பலன் கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு... இந்நாளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால் சூரிய கிரகணம் தொடங்கிய முதல் நள்ளிரவு வரை அக்னி தீர்த்தம் கடலில் சிறப்பு பூஜை செய்து கடலில் நீராடி பலரும் முன்னோர்களை வழிபட்டனர்.

Tiruppur Lunar eclipse plunger

கிரகணத்தை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக கிரகணம் தென்படவில்லை. எனவே அங்கு திரண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திண்டுக்கல் சாரல் மழை

அதேபோல, திண்டுக்கல் மற்றும் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை முன்னிட்டு அரிய நிகழ்வைகாண பொதுமக்கள் திரண்டனர். ஆனால் திடீரென லேசான சாரல் மழை பெய்ததால் கிரகணம் தென்படவில்லை.

பொதுவாக, பண்டைய காலத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணங்கள் நடைபெறுவதை அறியவும், வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்ற ஐதீகத்தாலும் உலக்கையை வெட்ட வெளியில் நிற்க வைத்து சந்திர, சூரிய கிரகணம் நேரத்தை நம்முடைய முன்னோர்கள் அறிந்து வந்தாக கூறப்படுகிறது.

உலக்கையும் உரலும்

அந்த காலத்தில், நெல், குதிரைவாலி, வரகு போன்ற உணவு தானியங்களை அரிசியாக மாற்றுவதற்கும், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற உணவு தானியங்களை மாவு பொருளாக மாற்றுவதற்கும் உலக்கைகள் பயன்படுத்தப்பட்டன..

இந்த தானியங்களை உரலில் வைத்து, உலக்கை மூலமாக இடித்து, அவைகளை உணவுப் பொருள்களாக மாற்றி சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் உலக்கை, உரல்களை பயன்படுத்துவது வெகு அரிதாகிவிட்டது..

சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தை அறிந்து கொள்வதற்கு அப்போதெல்லாம் போதுமான விஞ்ஞானம் இல்லாத காலகட்டம் என்பதால், பொதுமக்கள் உலக்கையை தங்களுடைய வீட்டின் வாசல்கள் முன்பு நிறுத்தி வைத்து விடுவார்கள்.. சூரிய கிரகணம் முடிந்த பிறகு பிடிமானம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட உலக்கை தானாக கீழே விழுந்துவிடும்.. அபபோதுதான், கிரகணம் முடிந்துவிட்டது என்பதை தெரிந்து கொள்வார்களாம்.

இன்று விஞ்ஞானத்தில் பலவிதமான புதுமைகள் வந்துவிட்டன.. எனினும் இன்றும்கூட சில இடங்களில் உலக்கையை வைத்து, கிரகணத்தை அறிந்து கொள்ளும் போக்கு நிலவி வருகிறது.. அந்தவகையில், திண்டுக்கல் நாகல்புதூரில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் உலக்கையை நிறுத்தி சோதனை செய்திருக்கிறார்கள்.

அங்குள்ள நாகரத்தினம் என்ற 73 என்ற மூதாட்டி, கடந்த பல வருடங்களாகவே உலக்கையை வைத்து கிரகணம் உள்ளதை, பொதுமக்களிடம் செய்து காட்டி வருகிறார்... நேற்றிரவும் உலக்கையுடன் வந்த நாகரத்தினம், கிரகண நேரத்தில் செய்து காட்டியதை, அந்த பகுதி மக்களும், குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்..

கிரகணம் நேரம் முடியும்வரை அந்த உலக்கை செங்குத்தாக நின்றது... இதன்மூலம் கிரகணம் உறுதி செய்யப்பட்டது..

திருப்பூர் சந்திரகிரகணம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களிலும் இத்தகைய முறையை கிராம மக்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்..

இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "பஞ்சாங்கத்தில், சூரியன் மற்றும் சந்திர கிரகணம் வரும் நேரம் உள்ளிட்ட விவரம் குறிப்பிட்டிருந்தாலும், பாமர மக்களுக்கு அதைபற்றி தெரியாது. எனவே, உலக்கையை, தாம்பாள தட்டில் செங்குத்தாக நிறுத்தி, சூரிய கிரகணம் வந்து, சென்றதை கணித்தோம். எங்கள் முன்னோர் சொன்னபடியே தற்போதும் கிரகணத்தை உலக்கை வைத்து கணிக்கிறோம். அதன்பிறகே, பரிகாரபூஜை மற்றும் வழிபாடு செய்கிறோம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+