போதை + சந்தேகம்.. கழுத்தை அறுத்த கணவர்.. தானும் தற்கொலை முயற்சி.. திருப்பூரில் பயங்கரம்!
மனைவியை கொன்ற கணவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது
திருப்பூர்: அளவுக்கு அதிகமான போதைப்பழக்கம், மண்டை நிறைய மனைவி மேல் சந்தேகம்.. இறுதியில் ஒரு கொலை வரை சென்றுவிட்டது!
திருப்பூரை சேர்ந்தவர் நிஷார் அகமது.. 37 வயதாகிறது.. கழிவு குடோன் தொழிலாளியாக வேலை பார்ப்பவர்.. முதல் மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டதால், ஹசினா என்ற 21 வயது பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நிஷார் அகமது போதைக்கு அடிமையானவர்.. தினமும் குடித்துவிட்டு வந்து, ஹசீனாவுடன் தகராறு செய்வார். இதைதவிர மனைவி நடத்தையில் சந்தேகமும் இருந்தது. அதனால் தகராறு நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் வழக்கம்போல நேற்றும் சண்டை நடந்தது. ஆவேசமான நிஷார், கதவை ஓடிப்போய் சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டார். கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ஹசீனா ரத்தம் கொட்டி, அங்கேயே உயிரிழந்தார். பிறகு அதே கத்தியில் தன் கழுத்தையும் அறுத்து கொண்டார். பிறகு அவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து, குழந்தையின் அழுகுரல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. ஹசீனா வீட்டில் இருந்து தான் அழுகுரல் சத்தம் வருகிறது என்று தெரிந்ததும், அங்கு ஓடினார்கள். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டியிருக்கவும் எதுவுமே புரியாமல் பதறி விட்டனர். அதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தாய், தந்தை இருவருமே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.
அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு குழந்தை அழுதுகொண்டு இருந்தது. நிஷார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர். ஹசினா உடலை மீட்கப்பட்டதுடன், நிஷார் அகமதுவை கோவை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. அளவுக்கு அதிகமான போதை காரணமாக, மனைவியை கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications