விடாமல் துரத்திய ஈகோ.. ஒரே சேலையில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குடும்ப பிரச்சனை காரணமாக, இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பூர்: இளம் தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் - லாவண்யா. இருவருக்கும் கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிறது. ஆனால் இந்த இளம் தம்பதிக்கு குழந்தை கிடையாது.

லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என கூறப்படுகிறது. முத்துக்கிருஷ்ணன் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்குள் ஈகோ பிரச்சனை இருந்ததாகவும், இதனால் நிறைய சண்டையும் அடிக்கடி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவுகூட இப்படித்தான் சண்டை நடந்துள்ளது. அப்போது வீட்டிலிருந்து பொருட்களை தூக்கி எறியும் சத்தம் அக்கம்பக்கம் வீடுகள் வரை கேட்டிருக்கிறது. வழக்கம்போல் சண்டை என்று அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில் நேற்றுகாலை இவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு போன் செய்து தகவலை சொன்னார்கள். போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு பார்த்தால், இரண்டு பேருமே தூக்கில் சடலமாக கொண்டிருந்தனர்.
ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி இருவருமே பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். இது கொலையா? தற்கொலையா என இனிமேல்தான் தெரியவரும்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications