“குடும்பம் போச்சே..” சிதறிய உடல்கள் - பல்லடத்தில் கோர விபத்து.. ஓட்டுநருக்கு தர்ம அடி! பரபர வீடியோ
திருப்பூர்: பல்லடம் அருகே பொள்ளாச்சி சாலையில் கண்டெய்னர் லாரி மோதி 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், குடிபோதையில் லாரி ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி சாலை வடுகபாளையம் அருகில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது 2 நாட்களுக்கு முன் ஈச்சர் கண்டைனர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்னி வேனில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் மீது மோதிய லாரி
உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். ஞானதுரை (27) என்பவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரின் தாய் ராஜம்மாள் (47), தந்தை செல்வராஜ் (48), உறவினர்கள் செல்வி, ஆசீர் கோவில்பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேரும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள வடுகபாளையம் சென்றுள்ளனர்.

கோர விபத்து
பெண் பார்த்த பின்னர் ஆம்னி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 6 பேரும் பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரில் காரை ஓரமாக நிறுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததனர். அப்போது பல்லடத்தில் இருந்த செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது படுவேகமாக மோதியது.

இருவர் பலி
இதில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ராஜம்மாள் மருத்துவமனை செல்லும் வழியில் காலமானார். இந்த விபத்து நடந்தவுடன் கண்டெய்னர் லாரியின் ஓட்டுநரான உடுமலையை சேர்ந்த பட்டீஸ்வரனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து தாக்கினர். ஓட்டுநர் சுயநினைவு இல்லாமல் தல்லாடியதால் அவரிடம் அங்கிருந்த மக்கள் குடிபோதையில் வண்டி ஓட்டினாயா என்று கேட்டார்.

பரபரப்பு வீடியோ
அப்போது ஒரு நபர் வேகமாக ஓட்டுநரை நோக்கி கம்பியால் தாக்க அவர் அங்கிருந்த ஒரு பள்ளத்தில்போய் விழுந்தார். "உன்னால ஒரு குடும்பம்போச்சு" என்று சொல்ல உயிரிழந்த பெண்ணின் உறவினர் உன்னால என் வாழ்க்கை போச்சடா.. அக்கா." என்று கதறும் வீடியோ காண்போர் மனதை பதற செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஓட்டுநர் பட்டீஸ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications