நம்பறீங்களோ... இல்லையோ... கோபால் வீட்டு மரத்தில் பால் வடியுதாம்.. ஒரே கூட்டம்!
திருப்பூர் அருகே வேப்ப மரத்திலிருந்து பால் வடிகிறது.. பரபரப்பு
Recommended Video

திருப்பூர்: நம்பறீங்களோ... இல்லையோ... விஷயம் இதுதான்.. கோபால் வீட்டு மரத்தில இருந்து பால் வடிந்து கொண்டிருக்கிறதாம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து வருவாய் பகுதி என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோபால். இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் ஒரு வேப்பமரமும் இருக்கிறது. இந்த மரத்தில் சிவசக்தி சிவ நாக சக்தி சாமி உள்ளதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

ஃபேமஸ் மரம்
அதனால் அந்த வேப்ப மரத்திற்கு தினமும் பூஜை செய்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் அந்த வேப்பமரம் ரொம்ப ஃபேமஸ் ஆனது.

நிறைய வழிகிறது
இந்நிலையில் 2 நாளுக்கு முன்னாடி அந்த வேப்ப மரத்திலிருந்து திடீரென பால் வடிந்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்தனர் பொதுமக்கள். ஆனால் இன்று காலை முதல் அந்த மரத்தில் நிறைய அளவில் பால் வடிய ஆரம்பித்திருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டனர்
இந்த விஷயம் சுற்றுவட்டார பகுதி முழுசும் பரவிவிட்டது. எல்லோரும் கூட்டம் கூட்டமாக கோபால் வீட்டுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணெதிரே மரத்தில் இருந்து வழிந்து வரும் பாலை பார்த்து மக்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டனர்.

வீடியோ, ஆடியோ
பொதுமக்களில் சிலர் மரத்துக்கு வழிபாடுகள், பூஜைகள் என இறங்கி விட்டார்கள். செல்வி, போட்டோ, வீடியோ என இன்னொரு பக்கம் நடக்கிறது. கோபால் வீட்டு தோட்ட மரத்தில் இருந்து பால் வடிவது பெரிய அளவில் அப்பகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications