எல் முருகன் போட்டியிடும்.. அவிநாசியில் முதல்வர் ஸ்டாலின் திடீரென வாகனத்தை விட்டு இறங்கி சம்பவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் இன்று திருப்பூர் பொதுக்கூட்டத்தை முடித்து திரும்பிய ஸ்டாலின் அவிநாசியில் தனது வாகனத்தை நிறுத்தி திடீரென்று ரோட்டில் நடந்து சென்று திமுகவின் இளம் வேட்பாளராக கோகிலாமணிக்கு வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் கோகிலாமணி போட்டியிடுகிறார். இவர் தான் திமுகவின் இளம் வேட்பாளர் ஆவார். இவருக்கு வயது 26. இவர் தற்போது தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று திமுக சார்பில் திருப்பூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் மேற்கொண்டார்.
நடந்து சென்ற ஸ்டாலின்
அதன்பிறகு அவிநாசி வழியாக அவர் சென்றார். இந்த சமயத்தில் திடீரென்று அவிநாசி தொகுதியில் தனது பிரசார வாகனத்தை விட்டு முதல்வர் ஸ்டாலின் திடீரென்று இறங்கினார். வாகனத்தை விட்டு ஸ்டாலின், திமுக வேட்பாளர் கோகிலாமணியுடன் நடந்து சென்றார். ஸ்டாலினை பார்த்தவுடன் கூட்டம் கூடியது.
ஸ்டாலின் உடன் செல்பி
பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று ஸ்டாலினை வரவேற்றனர். ஸ்டாலினிடம் கைகளை கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். இளம்பெண்கள், பெண்கள் உள்பட அனைத்து வயதினரும் ஸ்டாலினுடன் உற்சாகமாக செல்பி எடுத்து கொண்டனர். அவர்களிடம் திமுக வேட்பாளர் கோகிலாமணிக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அதன்பிறகு ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
எல் முருகன் போட்டி
இந்த அவினாசி தொகுதியில் திமுக சார்பில் கோகிலா மணி போட்டியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கமலி என்பவரும் களமிறங்கி உள்ளனர். தற்போது அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நான்கு முனை போட்டியில் யார் வெல்வார்கள்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல் முருகனை வீழ்த்த வியூகம்
இந்நிலையில் தான் மத்திய இணையமைச்சர் எல் முருகனை எதிர்த்து திமுக 26 வயது கோகிலாமணியை களமிறக்கி இருப்பதால் இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. எப்படியாவது எல் முருகனை இளம் பெண் வேட்பாளரை வைத்து வீழ்த்தி விட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதன் ஒரு கட்டமாக தான் பொதுமக்களுக்கு சர்ப்ரைஸாக முதல்வர் ஸ்டாலின் தனது வாகனத்தை விட்டு இறங்கி திமுக வேட்பாளர் கோகிலாமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications