திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோஸ்த் படா தோஸ்த்.. பாஜக கொடிக்கு அருகிலேயே அதிமுக கொடிகள்.. மோடிக்கு அதிமுக அடடே வரவேற்பு

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அதிமுக சார்பாக திருப்பூரில் அதிமுக கொடிகள் வைக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பூர்: பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அதிமுக சார்பாக திருப்பூரில் அதிமுக கொடிகள் வைக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக - பாஜக கட்சிகள் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி உடன்படிக்கை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Modi visit Tamilnadu: This is how AIADMK welcomes PM to Tiruppur

சில இடங்களை பகிர்வதில் நீடித்து வரும் குழப்பம் காரணமாக, பாஜக - அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்த அதிமுக - பாஜக கூட்டணி மிக நெருக்கமாகிவிட்டது என்பதை தற்போது திருப்பூர் அலங்காரங்கள் உணர்த்தி இருக்கிறது.

இன்று மாலை பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். திருப்பூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதற்காக பாஜக கட்சி மொத்த திருப்பூர் முழுக்க அலங்காரம் செய்து இருக்கிறது. மோடிக்காக பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டி உள்ளது.

இதற்கு மத்தியில் அதிமுகவும் இந்த மோடி வருகைக்காக இப்படி அலங்காரம் செய்து உள்ளது. பிரதமர் மோடியை வரவேற்று சில இடங்களில் அதிமுகவினர் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

அதேபோல் அதிமுக கொடியும் மோடி செல்ல கூடிய சாலை முழுக்க வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மோடி செல்லும் சாலை முழுக்க பாஜக கொடி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாஜக கொடிக்கு அருகிலேயே அதிமுக கொடியும் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக கொடிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியும் வைக்கப்பட்டு இருக்கிறது.

இது பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பாஜக அதிமுக கூட்டணி முடிவாகிவிட்டது தெளிவாக தெரிகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே மிச்சம் உள்ளது.

English summary
Modi visit Tamilnadu: The Red- White-Black flags, with Kamala Flags, This is how AIADMK welcomes PM to Tiruppur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X