Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் திடுக்! பணக்கார முதியவருக்காக.. மருமகளை மூளை சலவை செய்த மாமியார்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: புதியதாக திருமணமாகி வீட்டிற்கு வந்த மருமகளை, பணத்திற்காக முதியவரின் ஆசைக்கு இணங்க மாமியார் வற்புறத்தியுளு்ள சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் வரன் அமையவில்லை. இறுதியாக சமீபத்தில் கொடைக்கானலை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. சிறு வயதிலிருந்து வாழ்ந்த வீட்டை விட்டு பிரிந்து கணவன் வீட்டுக்கு சென்ற இளம்பெண், அவரும், அவருடைய குடும்பமும்தான் தன்னுடைய பாதுகாப்பு என்று கருதியிருந்தார். ஆனால், கணவன் வீட்டில் நடந்த சம்பவமே வேற..

crime police

அதாவது தொடக்கத்தில் மாமியர் ஜாடை மாடையாக இவரை திட்டி வந்தாலும், ஒரு கட்டத்தில் நன்கு அரவணைத்து செல்ல தொடங்கிவிட்டார். கொஞ்ச நாட்களில் இவரை விழுந்து விழுந்து கவனித்திருக்கிறார். மாமியாரின் பாசத்தை இளம்பெண்ணும் உண்மை என்று நம்பியுள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, மாமியாரின் சுய ரூபம் இவருக்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது, மாமியார் சரியான பணத்தாசை பிடித்த பெண்ணாக இருந்திருக்கிறார். அவருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். அதை எந்த வழியில் செய்தாலும் பிரச்னையில்லை.

இந்த பேராசை மருமகளையே பலிகடா ஆக்கும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது. அதாவது உதயகுமார் வீட்டிற்கு வயதான முதியவர் ஒருவர் வந்து சென்றிருக்கிறார். இவருக்கு சொத்துக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன. அதே நேரம் உதயகுமார் மனைவியான இளம்பெண் மீதும் ஒரு கண் இருந்திருக்கிறது. இதை தெரிந்துக்கொண்ட மாமியார், இளம்பெண்ணை பேசி மயக்கியுள்ளார். முதியவரை வளைத்து போட்டுவிட்டால் ஏராளமான சொத்துக்களை அனுபவித்துவிடலாம், வாழ்க்கையில் ராஜபோகமாக வாழலாம் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

வாழ வந்த இடத்தில், தனது வாழ்க்கைக்கு சொந்த மாமியாரே கொள்ளி வைப்பதை கேட்டு அதிர்ச்சியுற்ற இளம்பெண், இதுபோன்று தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனாலும் மாமியார் மூளை சலவையை விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வந்திருக்கிறார். இது குறித்து கணவரிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. எனவே, கணவர் வீட்டிலிருந்து தப்பித்து கொடைக்காணலில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அந்த ஊர் போலீசார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக பணக்கார முதியவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொந்த மாமியாரே, மருமகளை பணத்திற்காக காவு வாங்க முயன்றுள்ள சம்பவம் உடுமலையை உலுக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+