பச்சை குத்திருக்கியே.. இது யாரு.. என்ன உறவு.. 33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்!
பெண்ணை கொன்ற இளைஞர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
திருப்பூர்: "பச்சை குத்திட்டு இருக்கியே.. இது யார் பேரு.. அவனுக்கும் உனக்கும் என்ன உறவுன்னு கேட்டேன்.. மழுப்பலா பதில் சொன்னாள்.. அதான் பளார்ன்னு ஒரு அறை வெச்சேன்.. கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்" என்று அதிர்ச்சி வாக்குமூலம் தந்துள்ளார் 33 வயது கள்ளக்காதலியை கொன்ற 23 வயது இளைஞர்!
திருப்பூர் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். அதே ஓட்டலில் வேலை பார்த்த திருமங்கை என்ற 33 வயது பெண்ணை காதலித்து, 5 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். ராமபுதூரில் புது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், திடீரென மனைவியை காணவில்லை.
சம்பவத்தன்று, மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு போறேன் என்று ஸ்கூட்டி எடுத்து கொண்டு போனவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன ரமேஷ், மனைவியை தேடி அலைந்தார். அப்போதுதான், மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றங்கரையோரம், திருமங்கை சடலமாக கிடந்தது தெரியவந்தது.

மூலனூர் போலீசார்
திருமங்கையின் கைகள் துப்பட்டாவால் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது... வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது... கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது... தகவலறிந்து மூலனூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரணை ஆரம்பித்தனர். அவரது செல்போனும் ஆராயப்பட்டது.. அப்போதுதான், சேலத்தை சேர்ந்த தனபால் என்பவருடன் திருமங்கை கடைசியாக பேசியது தெரியவந்தது.

தனபால்
தனபால் சொல்லும்போது, "23 வயதான நான் நாமக்கல்லில் வேலை பார்த்தபோது ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போனேன். அப்போதுதான் முதன்முதலில் திருமங்கையை பார்த்தேன். அவருக்காகவே அதே ஓட்டலுக்கு திரும்ப திரும்ப சாப்பிட போனேன்.. நெருக்கமாக பழகினோம்.. என் ரூமுக்கும் அடிக்கடி வரவழைத்து ஜாலியாக இருப்போம். கல்யாணம் செய்ய எனக்கு எண்ணம் இருந்தது.. ஆனால் எனக்கு வயசு ரொம்ப கம்மி என்பதால், அதற்கு திருமங்கை ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சமயத்தில்தான், ரமேஷை காதலித்து, கல்யாணமும் செய்துள்ளார்.

யார் அது?
ஆனால் இன்னொரு நபருடனும் திருமங்கை தொடர்பில் இருந்தார். இதை தவிர, அவரது கையில் ஆடம்ஸ் என்று பச்சை குத்தி இருந்ததை பார்த்தேன்.. அது யார் பெயர் என்று கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.. அதனால் அதை பற்றி விசாரிக்கவே ரூமுக்கு வரவழைத்தேன்.. உல்லாசமாக இருந்தோம்.

பச்சை குத்திய பெயர்
அந்த சமயத்தில், ஆடம்ஸ் என்பது யார் பெயர் என்று கேட்டேன். அது தன் கணவர் ரமேஷின் இன்னொரு பெயர்தான் என்று சொன்னார். அதுவரை இல்லாமல் திடீரென பச்சை குத்தியதும், அதிலும் பெயர் கேள்விப்படாத பெயராக இருக்கவும் நான் தொடர்ந்து பச்சை குத்திய பெயரை பற்றியே கேட்டேன். ஆரம்பத்தில் உறுதியாக ரமேஷ் பெயர்தான் என்றவர் திடீரென மழுப்பலான பதிலை சொன்னார்.

கொன்றேன்
அந்த ஆத்திரத்தில்தான் அறைந்துவிட்டேன். கீழே மயங்கி விழுந்ததும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டேன்.. கைகளையும் அதே துப்பட்டாவால் கட்டி, சடலத்தை ஒரு போர்வையால் சுற்றினேன்.. பின்னர் ஊருக்கு போவதாக சொல்லி என் நண்பனின் காரை வாங்கி, அதில் சடலத்தை ஏற்றிக் கொண்டுவந்து மூலனூர் பகுதியில் சாலையோரம் வீசி சென்றேன்" என்றார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications