நாம் தமிழர் கட்சி கார்த்திகா உள்பட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கியது கோர்ட்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் நாதக வேட்பாளர் கார்த்திகா கைதாகியிருந்தார். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளராக இருப்பவர் கார்த்திகா. சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கார்த்திகா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Naam Tamilar Katchi Karthika

குறிப்பாக தேர்தலின்போது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, முதல்வர் விஜய் ரோடு ஷோ சென்ற பாதையில் மறியலில் ஈடுபட்டதாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி பதாகையை அகற்றிய போது போலீசாரை அவதூறாக பேசி தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல, காமராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற த.வெ.க. தொண்டர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், கார்த்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 4 வழக்குகளில் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்து கடந்த திங்கள் கிழமை கார்த்திகாவை போலீசார், மேற்கூறிய வழக்குகளின் அடிப்படையில் கைது செய்தனர். கார்த்திகாவின் கணவர் சந்திரகுமார் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான கார்த்திகாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திகா உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தன்னையும் கணவரையும் கைது செய்த நிலையில் குழந்தைகள் இருவரும் தனியாக உள்ளதாகவும், பிணையில் விடுவிக்க முடியாத பிரிவுகள் அரசியல் நோக்கத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கார்த்திகா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்திகா உள்பட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+