2026-ல் தவெகவால் என்டிஏ கூட்டணி 3-வது இடத்திற்கு தள்ளப்படும்- விஜய்க்கு டிடிவி தினகரன் ஆதரவு?
திருப்பூர்: அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால், என்டிஏ கூட்டணி 3ஆவது இடத்திற்கு பின்தங்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூரில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் என்டிஏ கூட்டணி 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது.

இது ஏதோ எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தில் நான் சொல்லவில்லை. கள யதார்த்தத்தை சொல்கிறேன். திமுக மீது இத்தனை குற்றச்சாட்டுகள், இத்தனை போராட்டம் நகராட்சித் துறை உள்பட பல துறைகளில் ஊழல்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன.
அது போல் பகுதிநேர ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களை நிரந்தரம் செய்கிறேன் என சொன்னார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம் என சொன்னார்கள்.
டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டது என்பதே தெரியவில்லை. வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் என்ன மாதிரியான வளர்ச்சி ஏற்பட்டது? எத்தனை தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்துள்ளன? இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை.
தமிழக மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத ஒரு சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றியை எப்படி பெற்றது என்பதை உண்மையிலேயே திமுகவை எதிர்க்கும் கட்சிகள் சுய பரிசோதனை செய்து தங்கள் கட்சி கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் ஆட்சியில் இருக்கும் திமுகவை வீழ்த்த முடியும்? என்பதுதான் யதார்த்தமான உண்மை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் கொண்ட அரசியல்வாதிகள், தவெகவில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். சில கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர்.
உறுதியான முடிவு எடுத்த பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதிமுக ஒன்றாக இருந்தால்தான் அடுத்த நூற்றாண்டுக்கும் கட்சியை கொண்டு செல்ல முடியும். தேர்தல் முடிவுக்கு பிறகாவது, அதிமுகவில் மீண்டும் இணைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறேன்.
பதவி ஆசைக்காகவும் சுய லாபத்திற்காகவும் பிளவு ஏற்படுத்தியவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றுதான் பாஜக தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள். ஒரு கட்சியில் நிலவும் பிரச்சினையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.
பாஜக மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் தவறாகப் பார்க்கவில்லை. திமுக, அதிமுகவை அடுத்து விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையவுள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு யாருடன் கூட்டணி என்பதை அறிவித்துவிடுகிறேன் என்றார் டிடிவி தினகரன்.
-
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!











Click it and Unblock the Notifications