அமைச்சர் சாமிநாதன் போட்ட போன்! 24 மணி நேரத்தில் ஊருக்கு வந்த அரசுப்பேருந்து! பள்ளி மாணவர்கள் ஹேப்பி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் புதிய பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துங்காவி ஊராட்சியில் உள்ள மலையாண்டி பட்டினத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதனிடையே மலையாண்டி பட்டினம் கிராமத்துக்கு சென்றிருந்த மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணனிடம், தங்கள் ஊருக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி மாணவர்களும், திமுக கிளை நிர்வாகிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
அப்படியா அமைச்சரிடம் சொல்லி செய்துவிட்டால் போது, என்ற உறுதியை கொடுத்துவிட்டு வீடு திரும்பிய ஜெயராமகிருஷ்ணன், இந்த விவரத்தை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். பள்ளிக்கு செல்ல மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்த அமைச்சர் சாமிநாதன், ஆன் தி ஸ்பாட்டிலேயே அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு போன் போட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை மாலை நேரங்களில் பேருந்து வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் சாமிநாதன் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மலையாண்டிபட்டிணம் கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றதால் அப்பகுதி பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர். அண்மையில் குடிநீர் குழாய் குறித்த கோரிக்கை மனு மீது அரை மணி நேரத்தில் தீர்வு வழங்கியிருந்தார் அமைச்சர் சாமிநாதன்.
இப்போது 24 மணி நேரத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்துக் கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார். இத்தனைக்கும் மடத்துக்குளம் தொகுதி தற்போது அதிமுக வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications