டான்ஸும், சண்டையும்தான் பாக்கி.. சட்டமன்றத்தில் விஜய் இதை மட்டும்தான் செய்யல! - உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்னும் டான்ஸும், சண்டையும் மட்டும்தான் செய்யவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது, "முதலமைச்சரோட பேச்சையெல்லாம் கேட்டிருக்கிறீர்களா? 5 நாட்களுக்கு முன்னர் மதுராந்தகத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் காட்டு கத்தல் கத்தினார்.

Udhayanidhi Stalin

அவர் பொதுக்கூட்டத்தில் பேசினாலும் சரி, சட்டமன்றத்தில் பேசினாலும் சரி.. காதில் பஞ்சு வைத்துக்கொண்டுதான் போக வேண்டும். நாங்கெல்லாம் சொன்னோம். கத்தாதீங்க BP வந்துடப்போகுது என்று சொல்லி.. நேற்று முன்தினம் தாராபுரத்திற்கு வந்தார். அங்கு கத்தவில்லை. ஆனால் நடிக்க தொடங்கிவிட்டார்.

வேட்பாளர் நன்றாக பேசிக்கொண்டிருந்தார்.. எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் பெர்பாமென்ஸை தொடங்கு என்று சொன்னவுடன், வேட்பாளர் அழ தொடங்கிவிட்டார். நியாயமாக பார்த்தால் வேட்பாளர் ஏன் அழ வேண்டும்? அவருக்கு ஓட்டுப்போட்டதற்காக நீங்கள்தான் அழ வேண்டும். இப்படி ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுத்ததற்காக தமிழ்நாட்டு மக்கள்தான் அழ வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை போல அவர் சீப்பான மினிஸ்டர்தான்.

நீங்கள் சட்டமன்ற நேரலையை பார்க்கிறீர்களா? நன்றாக இருக்கிறதா? ஆனால் நாங்கள் படும் கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். ஏனெனில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பாட்டு பாடுகிறார்கள். சட்டமன்றம் எனில் மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும். ஆனால், அவர்கள் பாட்டு பாடுகிறார்கள். பதிலுக்கு நாங்கள் என்ன எதிர் பாட்டா பாட முடியும்? இதற்காக பாட்டு கிளாஸுக்கா போக முடியும்?

ஒரு கட்டத்தில் நாங்கள் பொறுக்க முடியாமல் சொல்லிவிட்டோம். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பாட்டு பாடுகிறார்கள்.. அமைச்சர்கள் பாட்டு பாடுகிறார்கள்.. என்று சபாநாயகரிடம் சொல்லிவிட்டோம். அங்கு சொன்னால்.. அவரும் பாட்டு பாடுகிறார். முதலமைச்சர் டான்ஸும், சண்டையும் மட்டும்தான் இன்னும் சட்டசபையில் போடவில்லை" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+