திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ
திருப்பூர்: திருப்பூர் அடுத்த வெள்ளியம்பாளையம் கோலாகலமாக நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில், பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் பங்கேற்று வள்ளி கும்மி ஆட்டம் ஆடிமகிழ்ந்தார்.
திருப்பூர் அருகே வெல்லியம் பாளையத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 6 கலைக்குழுவினர் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

வள்ளி கும்மி ஆட்டம் என்பது முருகப்பெருமானின் கதையை 40 பாடல்களாகப் பாடி அதற்கேற்ப நடனமாடி மகிழும் ஒரு கலையாகும். முருகப்பெருமானின் மனைவி வள்ளி பிறந்தது முதல் முருகப் பெருமானைக் கண்டு காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்யும் வரை இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் பாடல்களாகப் பாடி அதற்கு ஏற்ப நடனம் ஆடுவர்.
இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், ஜெய் ஸ்ரீராம் கல்வி குழும தலைவர் K.M.தங்கராஜ் மற்றும் K.M.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பல்லடம் தொகுதி எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் கும்மி ஆடியவர்களோடு சேர்ந்து தானும் கும்மி பாட்டு க்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தார்.
கோர்வையாக குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் ஆடிய கும்மியாட்டம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது. இவ்விழாவில் அண்ணன்மார் கலைக்குழு, ஈகிள் மங்கையர்ஸ், ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம், வள்ளி முருகன் கலைக்குழு, காவடி வேலவன் கலைக்குழு, ஆறுமுக கலைக்குழு, கோவை வள்ளி கும்மி, மற்றும் காலபைரவர் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications