திருப்பூர் முருகம்பாளையம் மருந்துக்கடையில் ஒரே கூட்டம்.. 3வது முறையாமே.. இவரு தான் அந்த டாக்டர்
திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணாநகர் 1-வது வீதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஜோலி அகஸ்டின் என்பவர் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும், ஊசி போடுவது, குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளாராம். அவரை பிடித்து விசாரித்த போது, போலி டாக்டர் என்பது, இப்படி மாட்டுவது 3வது முறை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மருந்துக்கடை, கிளினிக்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். போலீசில் போலி டக்டரை ஒப்படைத்தனர்.
போலி டாக்டர்கள் சில பகுதிகளில் அதிகமாக உலா வருகிறார்கள். கிராம பகுதிகளிலும், சிறிய நகரங்களில் உள்ள தெருக்களிலும் அதிகமாக உலா வருகிறார்கள். அவர்கள் டாக்டரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க அடிக்கடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். அவர்களின் சோதனையில் சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது கிளினிக் சீல் வைக்கப்படும். போலி டாக்டரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். அப்படி இரண்டு முறை சிக்கிய டாக்டர் தற்போது 3வது முறையாக சிக்கியுள்ளார். திருப்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணாநகர் 1-வது வீதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் ஜோலி அகஸ்டின் என்பவர் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது. டாக்டருக்கே படிக்காமல் ஊசி போடுவது, குளுக்கோஸ் பாட்டில்கள் செலுத்தி சிகிச்சை மேற்கொள்வதாக வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீரா தலைமையில் கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு ஜோலி அகஸ்டின், மருந்துக்கடைக்குள் பின்புறம் உள்ள அறையில் இரண்டு கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் விசாரித்த போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்தவித கல்வி சான்றிதழும் அவரிடம் இல்லாததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கேரளாவில் 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர், தமிழ்நாட்டில் கடந்த 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார். இவர் ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு, 2024-ம் ஆண்டு இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டதும் விசாரணையில் உறுதியானது..
இதைத்தொடர்ந்து போலி டாக்டர் அகஸ்டியனை பிடித்து வீரபாண்டி போலீசில் மருத்துவ அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த மருந்து பொருட்கள், ஊசி மருந்துகள், சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டது. அந்த போலி மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பூர் முருகம்பாளையத்தில் ஜோலி அகஸ்டின் இதுபோல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பிறகு 2 வீதிகள் தள்ளி மீண்டும் மருந்துக்கடையை திறந்து கிளினிக் நடத்தியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications