பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து.. கொலை வழக்காக பதிவு செய்யுமாறு புகழேந்தி மனு
திருப்பூர்: முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் கார் விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி திருப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருப்பூர் பெருமாநல்லூர் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் திருப்பூர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர். அதனை இங்கு பதிவு செய்துள்ளோம் என்று புகழேந்தி கூறினார்.
2016ல் கோவை கல்லூரியில் இருந்து புறப்பட்ட வாகனத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் உட்பட 6 பேர் பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார். ஆனால் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்த வழக்கு தொடர்பாக விசாரித்ததில் வீரசுரேகா மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறேன். அவருக்கு ஒர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அதில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த குழந்தை நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

திருப்பூர் பெருமாநல்லூர் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் திருப்பூர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர். அதனை இங்கு பதிவு செய்துள்ளோம். நாளை இதன் வழக்கு விசாரணைக்கு வரும் அதில் முறையான புலன் விசாரணை வேண்டும், பயணம் செய்தவர்கள் விவரம் இல்லை அவற்றை விசாரித்து நடவடிக்கை வேண்டும், மேலும் இது விபத்து என பதிவு செய்யப்பட்ட வழக்கை நாங்கள் கொலை வழக்காக பதிவு செய்யப் வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளோம்.
தமிழகத்தில் இருந்து இதுவரை பிரதமர் இல்லை அது நடக்க வேண்டும் என்பது விருப்பம். காங்கிரஸ் உடன் தவெக இணக்கமாக உள்ளது . காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது போன்ற பேச்சுக்கள் மூலம் இணக்கத்தை குலைக்க வேண்டாம். இந்த பேச்சுக்கு இடமில்லை. எங்கள் தலைவருக்கு முழு தகுதி, திறமை, மக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் உள்ளது. தலைவர்களும் சிறப்பாக உள்ளார்கள் எனவே இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார் .
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் ஏற்படுத்திய விபத்து என்ன
கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அதியூர் பிரிவு மேம்பாலம் அருகே பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் தன் கல்லூரி நண்பர்களுடன் காரில் அதிவேகமாக சென்றாராம். அப்போது நடந்த விபத்தில் வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார்.இந்த வழக்கை விசாரித்த அவினாசி நீதிமன்றம் காரை ஓட்டிச் சென்ற பிரவீனுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பிரவீன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் 'இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்காததால் மறு விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி வா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கல்லூரி பெண்களுடன் காரில் பயணித்தபோது கார் விபத்துக்குள்ளானதாகவும், ஒரு பெண் உயிரிழந்து மற்றவர்கள் காயம்பட்டதாகவும், எனவே அஜாக்கிரதையாகவும் அதிவேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்பட்டதாக அவிநாசி நீதித்துறை நடுவர் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் பின்புலம் காரணமாக இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்த காரில் கல்லூரி மாணவிகள் பயணித்தது ஏன் என்ற கோணத்தில் விசாரிக்கப்படவில்லை.
வழக்கில் காட்டப்பட்ட கார், சம்பவத்தில் ஈடுபட்ட கார் கலர் இல்லை, மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் ஆவணங்களை விசாரணை அதிகாரி முறையாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கொடுத்த மனு நிராகரிக்கபட்டது. எனவே இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.இதையடுத்து வழக்கு திருப்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
