"மசாஜ்".. ஏம்மா ரவுடி பேபி.. இப்படியாம்மா செய்றது.. வெட்கப்படுறேன்.. ஜிபி முத்துவுக்கு வந்த ஆவேசம்!
ரவுடி பேபி சூர்யாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்
திருப்பூர்: ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்து வந்ததாக ரவுடி பேபி சூர்யா போலீசில் பிடிபட்டுள்ளதை அடுத்து, அது தொடர்பான பல பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அத்துடன், அவருடைய டிக்டாக் தோழன் ஜோடி ஜிபி முத்து வெளியிட்டு வீடியோவும் வைரலாகி வருகிறது.
திருச்சியில் பாலியல் தொழில் கொடிகட்டி பறந்து வருவதாக பலமுறை போலீசாருக்கு புகார் வந்துள்ளது.. ஸ்பா என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் வசதிப்படைத்த இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், பணக்கார வயதானவர்களை குறிவைத்தே ஒரு பாலியல் டீம் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் சென்றது.

மசாஜ் சென்டர்
இதையடுத்து, யாரெல்லாம் போலியாக மசாஜ் சென்டர் நடத்துகிறார்கள் என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்... பிறகு பெண் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடந்தது.. அப்போதுதான், உறையூர், அண்ணாமலை நகர், தில்லை நகர், டிவிஎஸ் டோல்கேட், ஜி கார்னர் ஆகிய இடங்களில் இந்த போலி டீம் செயல்பட்டு வருவதாக தகவல் வரவும், அங்கு விரைந்து சென்றனர்.

10 பேர் கைது
உறையூர் பகுதியில் சிக்கியவர்தான் ரவுடி பேபி சூர்யா... அவருடன் சேர்த்து 10 பேரை போலீசார் கைது செய்தனர்.. 12 பெண்கள் மீட்கப்பட்டனர்.. ஏழை பெண்களை வேலைக்கு வைத்து கொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனராம். இதுபோல 5 இடங்களில் இந்த போலியான ஸ்பா சென்டர் நடந்து வந்துள்ளது.. அதில் ஒரு சென்டரை நடத்தும் ஓனருடன் சேர்ந்துதான் சூர்யாவும் சேர்ந்து, இந்த ஸ்பா தொழிலை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது. நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று சூர்யா கதறி கொண்டிருக்கிறார் என்றாலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள்
தன் மீது ஏகப்பட்ட ஆபாச குற்றசாட்டுகள் வந்தபோதும், எதை பற்றியும் கவலைப்படாமல் பாப்புலாரிட்டி கிடைக்கிறதே என்பதற்காகவும், தன் பிள்ளைகளின் படிப்பிற்காகவும் ஒருசில விஷயங்களை பெருமையாக ஏற்று கொண்டவர் சூர்யா.. அதற்காக அவர் வருத்தப்பட்டது போலவும், வெட்கப்பட்டது போலவும் தெரியவில்லை.. சில சமயம் பெண்ணியம் பற்றியும் வீடியோ பேசி வெளியிடுவார்.

ஜிபி முத்து
இந்நிலையில், ஸ்பா சென்டர் பெயரில் போலியான மசாஜ் சென்டர்களை இயக்கி அதன் மூலம் இந்த கும்பல் காசு பார்த்து வந்துள்ள கும்பலுடன் சூர்யாவும் இணைந்துள்து ஆச்சரியத்தை உண்டு பண்ணி வருகிறது. அதைவிட ஆச்சரியம், சூர்யாவை நறுக்கென கேள்வி கேட்டு சக டிக்டாக் நண்பர் ஜிபி முத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கை
அதில், "என்னதான் குடும்ப வறுமை இருந்தாலும், இருப்பதை சாப்பிட்டுவிட்டு கவுரவமாக வாழ்க்கையை நடத்தாமல் இப்படியா செல்வது.. எத்தனையே டூயட் பாட்டுக்கு சூர்யாவுடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ பதிவிட்டதை நினைத்து நினைத்து அசிங்கப்படுகிறேன்" என்றும் காட்டமாக முத்து கூறியுள்ளார். இந்த வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications