4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்
4 வயது சிறுமியை நாசம் செய்தவரை மக்கள் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்
Recommended Video
திருப்பூர்: "அறுத்துப்புடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க..." என்று கொதித்து போய் சொல்லி செருப்பை கழட்டி அந்த நபரை வெளுக்கிறார்கள் பெண்கள்! காரணம்.. 4 வயது குழந்தையை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் இந்த காமுகன்!
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு வயது 34 ஆகிறது. பனியன் தொழிலாளியாக உள்ளார். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் வழக்கமாக தெருவில் விளையாடி கொண்டிருப்பார்கள்.
அப்படித்தான் 4 வயது குழந்தை கந்தசாமி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். இன்று காலை முதலே குடிபோதையில் இருந்த கந்தசாமி, வீட்டருகே விளையாடும் குழந்தையை பார்த்துவிட்டான். உடனே தன் வீட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கி உள்ளார்.

அலறல்
இதனிடையே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணோமே என்று அவளது பெற்றோர் தேடி கொண்டிருந்தனர். அப்போதுதான், கந்தசாமி வீட்டில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறி ஓடினர். வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது சிறுமியை கந்தசாமி நாசம் செய்து கொண்டிருந்ததை பார்த்து கொதித்து போய்விட்டனர்.

கந்தசாமி
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், பொது மக்களும் கந்தசாமியை பிடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து சட்டையை உருவி சரமாரியாக தாக்கினர். பெண்கள், தங்கள் செருப்பை கழட்டி அடித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடக்கு போலீசார் வந்தனர்.

கைது
கந்தசாமியை மீட்கும்போது, "அறுத்துபுடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. பாவம் எல்லாம் பார்க்காதீங்க.. 4 வயசு குழந்தைகூட இவன் கண்ணுக்கு தெரியலயே" என்று ஆவேசத்தில் சொன்னார்கள். இதையடுத்து போலீசார் கந்தசாமியை கைது செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

பகீர் வீடியோ
இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டு வருகின்றனர். 4 வயது குழந்தையை நாசம் செய்த கயவனை மரத்தில் கட்டி வைத்து மக்கள் அடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications