இனிப்பு, இலவச கபசுர குடிநீர், வாழ்க கோஷம்.. உத்தவ் தாக்ரே பிறந்தநாள் கோலாகலம்.. அதுவும் திருப்பூரில்
திருப்பூர்: சிவசேனா கட்சியின் தேசிய தலைவர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் 60ம் ஆண்டு பிறந்த நாள் விழா அக்கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இன்று கொண்டாடப்பட்டது.
கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவை வழங்கி, உத்தவ் தாக்ரே பிறந்த நாளை கொண்டாடினர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு, முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை எடுத்துக் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் அட்சயா, திருமுருக தினேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட சிவசேனா அமைப்பாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார்.

மேலும், வாழ்க வாழ்க வாழ்கவே.. மராட்டிய முதல்வர் உத்தவ் புகழ் வாழ்கவே.. ஓங்குக ஓங்குக இந்து ராஷ்டிரம் ஓங்குக.. என திரண்டிருந்த கட்சியினர் கோஷமிட்டனர்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என, சுமார் 20 பேர் இதில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications
