ஸ்டாலின் ரோடு ஷோ.. தாராபுரத்தில் திரண்ட மக்கள் கூட்டம்.. உற்சாக வரவேற்பால் களைகட்டிய தேர்தல் களம்

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கடந்த நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தாராபுரத்தில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் சூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதால் தாராபுரம் நகரமே களைகட்டி காணப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவி வருவதால், இரு தொகுதிகளிலும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைப்பதற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.

stalin-roadshow-in-dharapuram-huge-crowd-gathers-enthusiastic-welcome-for-dmk-chief

அனல் பறக்கும் பிரசாரம்

தவெகவை வீழ்த்தி தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முன்னாள் அமைச்சர்கள் படையுடன் திமுகவும், அதிமுகவும் வேகம் காட்டுகிறது. கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் பலத்தை காட்டுவதற்காக களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக எடப்பாடி பழனிசாமி, சிபிஎம் சண்முகம், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

மக்கள் வெள்ளத்தில் ஸ்டாலின்

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார். சாலையின் இருபுறமும் பொதுமக்கள், தொண்டர்கள், திமுகவினர் என மக்கள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. ஸ்டாலின் செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்துள்ளனர். அவரைக் காண்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியுள்ளதால் தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

மாலை பொதுக்கூட்டம்

அமராவதி சிலையில் இருந்து தொடங்கி பொள்ளாச்சி சாலை, பெரிய கடை வீதி வழியாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் உடுமலை சாலை மல்லி ரிசார்ட் அருகே திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+